தமிழ் இலக்கணம் | Tamil Grammar | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை
TNPSC Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை | தமிழ் இலக்கணத்தில் இங்கு மெய்ம்மயக்கம் அதன் வகைகளான உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம், சிறப்பு எழுத்துக்கள், சுட்டெழுத்துக்கள் அதன் வகைகள், மற்றும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள், மொழிக்கு இறுதி எழுத்துக்கள் பற்றி விரிவான விளக்கங்களை காணலாம்.

உடனிலை மெய்ம்மயக்கம் :
தன் எழுத்துக்களுடன் மட்டும் சேர்ந்து வரும் எழுத்துக்களை உடனிலை மெய்ம்மயக்கம் என்கிறோம். அவை க் , ச் , த் , ப் போன்ற எழுத்துக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
பக்கம், அச்சம், மொத்தம், அப்பளம்.
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்:
தன எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.
அவை ர் , ழ் போன்ற எழுத்துக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
சார்பு, வாழ்க்கை
தன எழுத்து மற்றும் பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் எழுத்துக்களும் உள்ளன. அவை ற், ன் ஆகும்.
எடுத்துக்காட்டு:
குற்றம், மேற்கு, அன்பு, அன்னம்.
சிறப்பு எழுத்துக்கள்:
தமிழில் சிறப்பு எழுத்துக்கள் 5 உள்ளன. அவை
ற, ன, ழ, எ, ஒ .
இவை வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் ஆதலால் சிறப்பு எழுத்துக்கள் என்கிறோம்.
எ , ஒ தேவநாகரியில் இல்லாதவை, ஆதலால் இவை இரண்டும் பாதி உயிர் என்று மொழி வல்லார்கள் கூறுகிறார்கள்.
தமிழ் சொற்களும், வட சொற்களும் கலந்த நிலை மணிப்பிரவளம் என்று பெயர்.
சுட்டெழுத்துக்கள்:
சுட்டெழுத்துக்கள் மூன்று உள்ளன. அவை அ, இ, உ ஆகும்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து – உ
தொலைவில் இருக்கும் பொருளை குறிக்கும் சுட்டெழுத்து – அ
அருகில் இருக்கும் பொருளை குறிக்கும் சுட்டெழுத்து – இ
அருகில் அல்லது தொலைவில் இடையில் உள்ள தொலைவை குறிக்கும் சுட்டெழுத்து – உ
சுட்டெழுத்து வகைகள்:
சுட்டெழுத்து 4 வகைப்படும். அவை அகச்சுட்டு , புறச்சுட்டு, அண்மை சுட்டு, சேய்மை சுட்டு ஆகும்.
அகச்சுட்டு:
ஒரு வார்த்தையில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தராது. இதுவே அகச்சுட்டு ஆகும்.
எடுத்துக்காட்டு:
அவன், இவன், அது, இது.
புறச்சுட்டு:
ஒரு வார்த்தையில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இவையே புறச்சுட்டு ஆகும்.
எடுத்துக்காட்டு:
அந்நீர் வீழ்ச்சி , இந்நூல் , இம்மலை
அண்மை சுட்டு:
அருகில் உள்ள பொருட்களை குறிப்பதால் அண்மை சுட்டு என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
இவன், இவர், இது,இவை,இம்மரம்.
சேய்மை சுட்டு:
தொலைவில் உள்ள பொருட்களை குறிப்பதால் சேய்மை சுட்டு என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்.
சுட்டுத்திரிபு:
அம்மரம், இவ்வீடு, இப்பள்ளி – இவற்றில் அ , இ ஆகிய சுட்டெழுத்துக்கள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன ஆதலால் இதனை சுட்டுத்திரிபு என்கிறோம்.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்:
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22 எழுத்துக்கள் உள்ளன.
உயிர் எழுத்துக்கள்: 12
உயிர்மெய் எழுத்துக்கள்: க , ச , த , ந , ப ம
உயிர்மெய் எழுத்துக்களில் சில எழுத்துக்களில் மட்டும் வரும்: ங ,ஞ , ய , வ
மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள்:
மெய் எழுத்துக்கள்: 18
ட , ண , ர , ல , ழ , ள , ற , ன
ஆய்த எழுத்து: – 1
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்:
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 24 உள்ளன.
உயிர் எழுத்து – 12
மெய் எழுத்து – 11
குற்றியலுகரம் – 1
எடுத்துக்காட்டு: பொன் , மண், உரிஞ் , வெரிந் ( வெரிந் -முதுகு ).
TNPSC தேர்விற்கான பல்தேர்வு கேள்விகள் மற்றும் பதில்கள்
- உடனிலை மெய்ம்மயக்கம் எவை?
a) க், ச், த், ப்
b) ற், ன்
c) ர், ழ்
d) எ, ஒ
விடை: a) க், ச், த், ப்
- “பக்கம்” எந்த வகை மெய்ம்மயக்கம்?
a) உடனிலை மெய்ம்மயக்கம்
b) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
c) சிறப்பு எழுத்து
d) சுட்டெழுத்து
விடை: a) உடனிலை மெய்ம்மயக்கம்
- கீழ்க்கண்ட சொற்களில் எந்த ஒன்று உடனிலை மெய்ம்மயக்கம் அடங்கிய சொல்?
a) சார்பு
b) அச்சம்
c) அன்பு
d) வாழ்க்கை
விடை: b) அச்சம்
- “மொத்தம்” என்ற சொல்லில் உள்ள மெய்ம்மயக்கம்?
a) வேற்றுநிலை
b) உடனிலை
c) சிறப்பு எழுத்து
d) சுட்டெழுத்து
விடை: b) உடனிலை
- உடனிலை மெய்ம்மயக்கம் கொண்ட மற்றொரு சொல்?
a) மேற்கு
b) அப்பளம்
c) வாழ்க்கை
d) அன்னம்
விடை: b) அப்பளம்
- வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எவை?
a) க், ச், த், ப்
b) ற், ன்
c) ர், ழ்
d) எ, ஒ
விடை: c) ர், ழ்
- “வாழ்க்கை” எந்த வகை மெய்ம்மயக்கம்?
a) உடனிலை
b) வேற்றுநிலை
c) சிறப்பு எழுத்து
d) சுட்டெழுத்து
விடை: b) வேற்றுநிலை
- வேற்றுநிலை மெய்ம்மயக்கம் கொண்ட சொல்?
a) அச்சம்
b) சார்பு
c) அப்பளம்
d) மொத்தம்
விடை: b) சார்பு
- “சார்பு” என்ற சொல்லில் உள்ள மெய்ம்மயக்கம்?
a) உடனிலை
b) வேற்றுநிலை
c) சிறப்பு எழுத்து
d) சுட்டெழுத்து
விடை: b) வேற்றுநிலை
- வேற்றுநிலை மெய்ம்மயக்கம் அடங்கிய மற்றொரு சொல்?
a) குற்றம்
b) அன்பு
c) அன்னம்
d) வாழ்வு
விடை: d) வாழ்வு
- தனி எழுத்துக்கள் எந்தெந்தவை?
a) ற, ன
b) எ, ஒ
c) இரண்டும்
d) ஒன்றுமில்லை
விடை: c) இரண்டும்
- “குற்றம்” எந்த வகை மெய்ம்மயக்கம்?
a) உடனிலை
b) வேற்றுநிலை
c) இரண்டும்
d) ஒன்றுமில்லை
விடை: c) இரண்டும்
- சிறப்பு எழுத்துக்கள் எத்தனை?
a) 3
b) 4
c) 5
d) 6
விடை: c) 5
- சிறப்பு எழுத்துக்கள் எவை?
a) க், ச், த், ப், ற்
b) ற, ன, ழ, எ, ஒ
c) ர், ழ், ண், ந், ற்
d) எதுவும் இல்லை
விடை: b) ற, ன, ழ, எ, ஒ
- “எ” மற்றும் “ஒ” எதற்கு பிரத்தியேகமாக கருதப்படுகிறது?
a) வடமொழியில் இல்லாததால்
b) ஒருங்கிணைந்த எழுத்தாக இருப்பதால்
c) ஒலிப்பெருக்கத்திற்காக
d) பயன்பாட்டில் இல்லாததால்
விடை: a) வடமொழியில் இல்லாததால்
- சுட்டெழுத்துக்கள் எத்தனை?
a) 2
b) 3
c) 4
d) 5
விடை: b) 3
- சுட்டெழுத்துக்கள் எவை?
a) அ, இ, உ
b) எ, ஒ, ற
c) ர், ழ், ன
d) எதுவும் இல்லை
விடை: a) அ, இ, உ
- தற்போது பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து?
a) அ
b) இ
c) உ
d) எ
விடை: c) உ
- “அ” என்ன குறிக்கிறது?
a) தொலைவில் உள்ளதை
b) அருகிலிருப்பதை
c) மிதமான இடத்தை
d) எதுவும் இல்லை
விடை: a) தொலைவில் உள்ளதை
- “இ” என்ன குறிக்கிறது?
a) தொலைவில் உள்ளதை
b) அருகிலிருப்பதை
c) மிதமான இடத்தை
d) எதுவும் இல்லை
விடை: b) அருகிலிருப்பதை
- சுட்டெழுத்துகள் எந்த வகைப்படும்?
a) 2
b) 3
c) 4
d) 5
விடை: c) 4
- அகச்சுட்டு என்றால்?
a) ஒரே சொற்றொடரில் மட்டும் வரும்
b) சுட்டெழுத்து நீக்கினால் பொருள் தராத சொற்கள்
c) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
d) எதுவும் இல்லை
விடை: b) சுட்டெழுத்து நீக்கினால் பொருள் தராத சொற்கள்
- அகச்சுட்டு கொண்ட சொல்?
a) அவன்
b) குற்றம்
c) சார்பு
d) அன்பு
விடை: a) அவன்
- புறச்சுட்டு என்றால்?
a) சொற்றொடருக்குள் மட்டும் வரும்
b) தனிப்பட்ட பொருளில் மட்டும் வரும்
c) இடைவெளியில் வரும்
d) சொல் முடிவில் வரும்
விடை: a) சொற்றொடருக்குள் மட்டும் வரும்
- புறச்சுட்டு கொண்ட சொல்?
a) அது
b) இவன்
c) அன்பு
d) சார்பு
விடை: a) அது
- புறச்சுட்டு என்பது என்ன?
a) ஒரே வார்த்தையில் சுட்டெழுத்து நீக்கினால் பொருள் தராது
b) சுட்டெழுத்து நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தரும்
c) அருகிலிருக்கும் பொருளை குறிக்கும்
d) தொலைவில் இருக்கும் பொருளை குறிக்கும்
பதில்: b) சுட்டெழுத்து நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தரும்
- புறச்சுட்டு அடங்கிய சொல் எது?
a) இவன்
b) இது
c) இந்நூல்
d) அவன்
பதில்: c) இந்நூல்
- “அந்நீர் வீழ்ச்சி” எந்த வகை சுட்டு?
a) அகச்சுட்டு
b) புறச்சுட்டு
c) அண்மை சுட்டு
d) சேய்மை சுட்டு
பதில்: b) புறச்சுட்டு
- புறச்சுட்டு கொண்ட மற்றொரு சொல் எது?
a) இம்மலை
b) இவன்
c) அது
d) அவர்
பதில்: a) இம்மலை
- புறச்சுட்டு அடங்கிய சொல் எது?
a) அம்மரம்
b) அவள்
c) இந்நூல்
d) இவன்
பதில்: c) இந்நூல்
- அண்மை சுட்டு என்பது என்ன?
a) தொலைவில் உள்ள பொருளை குறிக்கும்
b) அருகில் உள்ள பொருளை குறிக்கும்
c) பொருள் தராத சொற்கள்
d) வடமொழியில் இல்லாத சொற்கள்
பதில்: b) அருகில் உள்ள பொருளை குறிக்கும்
- “இவன்” எந்த வகை சுட்டு?
a) புறச்சுட்டு
b) சேய்மை சுட்டு
c) அண்மை சுட்டு
d) சுட்டுத்திரிபு
பதில்: c) அண்மை சுட்டு
- அண்மை சுட்டு கொண்ட சொல் எது?
a) இது
b) அவள்
c) அந்நீர்
d) அவ்வீடு
பதில்: a) இது
- “இவை” எந்த வகை சுட்டு?
a) அகச்சுட்டு
b) புறச்சுட்டு
c) அண்மை சுட்டு
d) சேய்மை சுட்டு
பதில்: c) அண்மை சுட்டு
- அண்மை சுட்டு அடங்கிய மற்றொரு சொல் எது?
a) இவன்
b) அவர்
c) அது
d) அவை
பதில்: a) இவன்
- சேய்மை சுட்டு என்பது?
a) தொலைவில் உள்ள பொருளை குறிக்கும்
b) அருகிலிருக்கும் பொருளை குறிக்கும்
c) பொருள் தராத சொற்கள்
d) வடமொழியில் இல்லாத சொற்கள்
பதில்: a) தொலைவில் உள்ள பொருளை குறிக்கும்
- “அவன்” எந்த வகை சுட்டு?
a) புறச்சுட்டு
b) சேய்மை சுட்டு
c) அண்மை சுட்டு
d) சுட்டுத்திரிபு
பதில்: b) சேய்மை சுட்டு
- சேய்மை சுட்டு கொண்ட சொல் எது?
a) இது
b) அவள்
c) இவை
d) இவன்
பதில்: b) அவள்
- “அம்மரம்” எந்த வகை சுட்டு?
a) புறச்சுட்டு
b) சேய்மை சுட்டு
c) அண்மை சுட்டு
d) சுட்டுத்திரிபு
பதில்: b) சேய்மை சுட்டு
- சேய்மை சுட்டு அடங்கிய மற்றொரு சொல் எது?
a) இவன்
b) அவர்
c) இது
d) இவை
பதில்: b) அவர்
- சுட்டுத்திரிபு என்றால் என்ன?
a) சுட்டெழுத்துக்கள் மாற்றம் அடையும் நிகழ்வு
b) அருகில் உள்ள பொருளை குறிக்கும்
c) பொருள் தராத சொற்கள்
d) வடமொழியில் இல்லாத சொற்கள்
பதில்: a) சுட்டெழுத்துக்கள் மாற்றம் அடையும் நிகழ்வு
- “அம்மரம்” எந்த வகை சுட்டு?
a) புறச்சுட்டு
b) சேய்மை சுட்டு
c) சுட்டுத்திரிபு
d) அண்மை சுட்டு
பதில்: c) சுட்டுத்திரிபு
- சுட்டுத்திரிபு அடங்கிய சொல் எது?
a) இவ்வீடு
b) இது
c) இவன்
d) அவர்
பதில்: a) இவ்வீடு
- “இப்பள்ளி” எந்த வகை சுட்டு?
a) புறச்சுட்டு
b) சேய்மை சுட்டு
c) சுட்டுத்திரிபு
d) அண்மை சுட்டு
பதில்: c) சுட்டுத்திரிபு
- சுட்டுத்திரிபு அடங்கிய மற்றொரு சொல் எது?
a) இந்த
b) அது
c) இவை
d) அவர்
பதில்: a) இந்த
- மொழிக்கு முதலில் வரும் உயிர் எழுத்துக்கள் எத்தனை?
a) 10
b) 12
c) 14
d) 16
பதில்: b) 12
- மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துக்கள் எவை?
a) க, ச, த, ந, ப, ம
b) ங, ஞ, ய, வ
c) இரண்டும்
d) எதுவும் இல்லை
பதில்: c) இரண்டும்
- மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள் எத்தனை?
a) 18
b) 20
c) 22
d) 24
பதில்: a) 18
- மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை?
a) 20
b) 22
c) 24
d) 26
பதில்: c) 24
- குற்றியலுகரம் அடங்கிய சொல் எது?
a) பொன்
b) மண்
c) உரிஞ்
d) வெரிந்
பதில்: c) உரிஞ்
For More TNPSC Notes – CLICK HERE