TNPSC தினம் ஒரு அறிஞர்
TNPSC தினம் ஒரு அறிஞர்

TNPSC தினம் ஒரு அறிஞர் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு | தினம் 4

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு

 

அறிமுகம்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு | பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்

 

பிறப்பு:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்ற ஊரில் 10/03/1933-இல் பிறந்தார். இவரது இயற்பெயர் துரை மாணிக்கம் ஆகும்.

இவரது வாழ்க்கைத்துணைவியின் பெயர் தாமரை ஆகும். இவருக்கு பொற்கொடி, தேன்மொழி, பூங்குன்றன், சித்திரைசெந்தாழை, பிறைநுதல் என ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

 

பெற்றோர்:

இவரது பெற்றோர் பெயர் தெரிய வரவில்லை.

 

வாழ்க்கை வரலாறு:

தமிழ்நாட்டை சேர்ந்த தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் தம்ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் 40-கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். இவர் குமுகாய – அரசியல் காலத்தில் சாதி எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு, தனித் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு ஆதரவாக செறிவுடன் பணியாற்றினார்.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர் ஆவார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்க்கப்பட்டது.

1950-இல் இவர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சேலம் நகராண்மை கல்லூரியில் தற்போது )சேலம் அரசினர் கலைக்கல்லூரி
) பணியாற்றினார்

கல்லூரிக்கு பின் 1952 முதல் 1954 வரை சேலம் கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளராகவும், கணக்காய்வாளராகவும் பணியாற்றினார். 1954-இல் பாண்டிச்சேரிக்கு சென்று அஞ்சல் துறையில் எழுத்தராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

1964 முதல் 1965 வரை கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜீவ் காந்தி படுகொலையைதொடர்ந்து எழுதிய ஒரு பாவியத்தை கரணம் காட்டி 26 ஜனவரி 1993 அன்று சிறை சென்றார். மொத்தம் 20 முறைக்கு மேலாக சிறைக்கு சென்றுள்ளார். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளை செய்து விட்டார் அவற்றில் ஒன்று திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகும்.

இவர் ஈழ தமிழர்களை நேரடியாகவே ஆதரித்தார். அதை தம் பாடல்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

சிறப்பு பெயர்:

இவருக்கு பாவலரேறு என்ற சிறப்புப்பெயரை பாவாணர் அவர்கள் சூட்டி மகிழ்ந்தார்

 

நடத்திய இதழ்கள்:

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்ற இதழ்களை நடத்தினார்.

 

இயற்றிய நூல்கள்:

நூறாசிரியம், பாவிய கொத்து, கொய்யாகனி, பள்ளிப்பறவைகள், மகபுகுவஞ்சி, அறுபருவத்திருக்கூத்து, ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், இட்ட சாவம் முட்டியது, இனம் ஒன்றுபட வேண்டும் என்வது எதற்கு?, இலக்கிய துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்க பணிகள், இளமை உணர்வுகள், கழுதை அழுத கதை, இளமை விடியல், எண்சுவை எண்பது, உலகியல் நூறு, ஐயை (பாவியம்), சாதித்தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும், சாதி ஒழிப்பு, நெருப்பாற்றில் எதிர் நீச்சல், பாச்சோறு, குழந்தை பாடல்கள், அருளி, பெரியார், மொழி ஞாயிறு பாவாணர், வாழ்வியல் முப்பது, வேண்டும் விடுதலை, திருக்குறள் மெய்பொருளுரை  போன்ற 40 கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

 

சிறப்புகள்:

தமிழுக்கு கருவூலமாய் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது பாடல்கள் திருக்குறள் மெய்பொருளுரை ஆகும்.

தமிழுணர்வு மிக்க பாடல்களை கொண்ட நூல் கனிச்சாறு ஆகும்.

 

மறைவு:

இவர் குருதி அழுத்தக் குறைவு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தனது 63 ஆவது வயதில் 11/06/1995 இல் சென்னை தியாகராய நகரில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் 150000 பேர் பங்கேற்றனர். இவரது உடல் மேடவாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது

 

TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply