பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆசிரியர் குறிப்பு | Pattukottai Kalyanasundram Biography | முழு வாழ்க்கை வரலாறு
அறிமுகம் :
Pattukottai Kalyanasundram Biography | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆசிரியர் குறிப்பு | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.
பிறப்பு :
இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கொட்டை என்னும் சிற்றுரில் 13.04.1930-ல் பிறந்தார்.
பெற்றோர் :
இவரது பெற்றோர் பெயர் அருணாச்சலனார் – விசாலாட்சி ஆவர். இவர்களுக்கு இளைய மகனாக பிறந்தார்.
வாழ்க்கை வரலாறு :
இவரின் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். இவருக்கு கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும், வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவரது மனைவி பெயர் கௌரவம்மாள்.
இவர் தமது பத்தொன்பதாவது வயதில் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவரது பாடல்கள் பெரும்பாலும் கிராமிய பண்ணைத் தழுவியவை. இவர் தனது பாடல்களில் உருவங்களை காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவரது பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியீட்டு வந்தது. 1954-ல் படித்த பெண் என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி திரைத் துறையில் முத்திரை பதித்தார்.
இவர் தமது இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமை கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தை கட்டி வளர்க்க தீவிர பங்கெடுத்தார்.
இவரது 29 வது வயதில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி,மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடனக்காரர், கவிஞர் என 17 விதமான பணிகளை செய்தார்.
சிறப்புகள் :
இவர் வொரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்தி பாடல்களை பாடியது இவரது சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.
படைப்புகள்:
இவர் இயற்கை , காதல், கதைப்பாடல், நாடு, சமூகம்,அரசியல், தத்துவம்,பாட்டாளிகளின் குரல்,இறைமை, பொது,மகிழ்ச்சி, சோகம், சிறுவர் போன்ற கருப்பொருள்களில் 187 திரைப்பட பாடல்கள்இயற்றியுள்ளார்.
மறைவு:
1959-ல் இவரது மனைவிக்கு குழந்தை குமரவேல் பிறந்தார். அதே ஆண்டில் 08/10/1959 – ல் இவர் அகால மரணம் அடைந்தார்.
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE