TNPSC தினம் ஒரு அறிஞர்
TNPSC தினம் ஒரு அறிஞர்

TNPSC தினம் ஒரு அறிஞர் | முடியரசன் ஆசிரியர் குறிப்பு | தினம் 3

முடியரசன் ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு

 

அறிமுகம் :

முடியரசன் ஆசிரியர் குறிப்பு | கவியரசு என்று அழைக்கப்படும் முடியரசன் அவர்களின் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு,எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள்,அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

 

பிறப்பு:

கவிஞர் முடியரசன் அவர்கள் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் என்ற ஊரில் 07-10-1920 அன்று பிறந்தார்

முடியரசனின் இயற்பெயர் துரைராசு என்பதாகும்.

 

பெற்றோர்:

இவரது பெற்றோர் பெயர் சுப்பாராயலு மற்றும் சீதாலட்சுமி ஆகும்.

 

வாழ்க்கை வரலாறு :

இவர் காரைக்குடியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.

முடியரசன் அவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பராவார்.

சாதி சமய சடங்குகளை எதிர்த்தவர் முடியரசன்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் முடியரசன்.
தனது இறப்பின் போது எவ்வித சடங்கும் செய்ய கூடாது என்றவர் முடியரசன்.

இவரது நூல்கள் 2000-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

 

சிறப்பு பெயர் :

இவர் கவியரசு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்.

பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.

திராவிட இயக்க கவிஞர் , கவிப்பேரரசர் என்று கலைஞர் அவர்கள் அழைத்தார்.

இவருக்கு பாவரசர் ,பொற்பேழை , மொழிஞாயிறு , தேவநேய பாவாணர் பட்டன்களை உலகத்தமிழ்க்கழகம் 1979-இல் வழங்கியது.

 

முடியரசன் அவர்களின் படைப்புகள் :

பூங்கொடி, காவியப்பாவை , வீரகாவியம், முடியரசன் கவிதைகள், ஊன்றுகோல் (நாடக நூல்), சுவரும் சுண்ணாம்பும் , பாடும்குயில், புதியதொரு விதி செய்வோம், நெஞ்சு பொறுக்கவில்லையே , இளம்பெருவழுதி  (நாடக நூல்) , கவியரங்கில் முடியரசன், வள்ளுவர் கோட்டம், ஞாயிறும் திங்களும் , அன்புள்ள இளவரசனுக்கு, அன்புள்ள பாண்டியனுக்கு , மனிதனை தேடுகின்றேன், மனிதரை கண்டுகொண்டேன்,எப்படி வளரும் தமிழ், தமிழ் வழிபாடு, தமிழ் முழக்கம், தாய்மொழியைக் காப்போம், நெஞ்சில் பூத்தவை முதலியன.

முடியரசனின் பூங்கொடி என்ற நூல் 1966-இல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

இவரது சுயசரிதையை பாட்டு பறவையின் வாழ்க்கை பயணம் என்ற பெயரில் நமக்கு நூலாக கொடுத்துள்ளார்.

 

முடியரசன் பெற்ற விருதுகள்:

முடியரசன் அவர்கள் 1987 -இல் பாவேந்தர் விருது பெற்றார்.

1988 – இல் கலைஞர் விருது பெற்றார் .

1993 – இல் முத்தையாவேல் நினைவு பரிசை பெற்றார்.

1998 – இல் முடியரசனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது

 

முடியரசன் அவர்களின் சிறப்புகள்:

கவிஞர் முடியரசன் பாரதிதாசனின் மூத்த வழித்தோன்றல் என்று அறியப்பட்டவர்
பாரதிதாசன் அவர்கள் முடியரசன் அவர்களை எனது மூத்த வழித்தோன்றல் எனக்கு பின் வந்த கவிஞர் என்று பாராட்டுகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் முடியரசன் அவர்களை திராவிட நாட்டின் வானம்பாடி என பாராட்டுகிறார்.
தந்தை பெரியார் வரிகள் முடியரசனை கவிஞன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று பாராட்டுகிறார்.

இவருக்கு மாநில நல்லாசிரியர் விருது 1974-இல் வழங்கப்பட்டது.

 

மறைவு:

கவிப்பேரரசர் முடியரசன் அவர்கள் டிசம்பர் 3 1998 இல் ( 03/12/1998 ) இறைவனடி சேர்ந்தார்.

 

TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply