Tamil Poet Pitchamoorthy Biography | TNPSC Tamil Academy | கவிஞர் ந .பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு
அறிமுகம் :
Tamil Poet Pitchamoorthy Biography | TNPSC Tamil Academy | கவிஞர் ந .பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு | கவிஞர் ந .பிச்சமூர்த்தி அவர்கள் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்
பிறப்பு :
ந .பிச்சமூர்த்தி அவர்கள் 15/08/1900 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கட மகாலிங்கம் . இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களை கொண்டு அழைத்தால் காலன் அவர்களை அழைத்து செல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை “பிச்சை ” என்று அழைத்தனர். பின்னாளில் இதுவே பிச்சைமூர்த்தி ஆனார்.
பெற்றோர் :
இவரது பெற்றோர் பெயர் நடேச தீட்சிதர் – காமாட்சியம்மாள் ஆவர் . நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்றவர் . சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
வாழ்க்கை வரலாறு :
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார் . தத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தார் . சென்னை சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றார் . வழக்கறிஞராக 1925 முதல் 1938 வரை பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றினார் .
1925 இல் சாரதா என்பவரை திருமணம் புரிந்தார் .
இவர் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்,நாடகங்கள் போன்ற படைப்புகளை கொடுத்துள்ளார். இவர் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் வாழ்ந்துள்ளார் .
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதிய பிச்சமூர்த்தி, பின்னர் பாரதி இலக்கியத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தமிழில் எழுதத்தொடங்கினர் . முதலில் ஆங்கில சிறுகதைகள் எழுதினார் . பின் தமிழ் எழுத தொடங்கினர் . பிக்ஷு ரேவதி எனும் புனைப் பெயர்களில் பிச்சமூர்த்தி எழுதினார். மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் சிறப்பாக எழுதிய தொடக்கக் காலப் படைப்பாளிகளில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி விளங்கினார் . பிச்சமூர்த்தி மணிக்கொடி இதழில் 1934 காதல் என்ற தலைப்பில் தனது முதல் புதுக்கவிதையை எழுதினார்.
பிச்சமூர்த்தியின் “ஸயன்ஸு க்குப் பாலி” என்ற முதல் தமிழ்ச்சிறுகதை 1932-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியானது. இவரது முதல் புதுக்கவிதை “காதல்” என்ற தலைப்பில் 1934இல் வெளியானது. கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற ” முள்ளும் ரோஜாவும் ” என்ற சிறுகதைதான் தமிழிலக்கிய உலகத்தில் பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத்தந்தது எனலாம்.
இவர் ஸ்ரீராமானுஜர் எனும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
பிச்சைமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீகத்திலும், துறையிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வாய்த்த பின்னரும் ஒரு வருட காலம் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னை துறவியக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமணா மஹரிஷியிடமும், சித்தர் குழந்தைசாமியிடமும் வேண்டினார் . ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கை தான் உனக்கு பொருத்தமென உபதேசித்திருக்கிறார்கள்.
பிச்சமூர்த்தி அவர்கள் ஆன்மீக சிந்தனைகள் மீது மட்டுமில்லாது, காந்தீயத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இளமையிலேயே காந்தீய நிர்மாண திட்டங்களை பரப்புவதிலும், நகர சுத்திகரிப்பு வேலைகளிலும் பிச்சமூர்த்தி ஈடுபட்டிருந்தார். பிச்சமூர்த்தியின் இளம் வயது தொட்டு கு . ப. ராஜகோபாலன் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார் .
சிறப்பு பெயர் :
பிச்சமூர்த்தி அவர்கள் தமிழ் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்டார்
படைப்புகள்:
சிறுகதை :
பதினெட்டாம் பெருக்கு
ஜம்பரும் வேஷ்டியும்
மோகினி
குடும்ப ரகசியம்
பிச்சமூர்த்தியின் கதைகள்
மங்கை தலை
இரட்டை விளக்கு
காக்கைகளும் கிளிகளும்
கஞ்சா மடம்
கவிதைத் தொகுப்புகள் :
காட்டுவாத்து
வழித்துணை
குயிலின் சுருதி
கட்டுரை தொகுதி :
மனநிழல்
நாடகங்கள் :
காளி
சிறப்புகள்:
பிச்சமூர்த்தி நவ இந்தியா பத்திரிக்கையில் சில காலம் பணியில் இருந்தார். பின் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிக்கைகளில் இவரின் எழுத்துக்கள் வெளிவர தொடங்கின .
மறைவு:
ந. பிச்சமூர்த்தி அவர்கள் 04/12/1976 இல் தனது எழுபத்தி ஆறாவது வயதில் சென்னையில் காலமானார் .
ந. பிச்சமூர்த்தி அவரகள் பற்றிய 20 தேர்வு கேள்விகள் மற்றும் பதில்கள் (TNPSC)
- ந. பிச்சமூர்த்தி பிறந்த தேதி எப்போது?
A) 15/08/1900
B) 14/08/1900
C) 15/08/1901
D) 16/08/1900
Answer: A) 15/08/1900
- பிச்சமூர்த்தியின் பிறப்பிடம் எது?
A) சென்னை
B) கும்பகோணம்
C) மதுரை
D) திருச்சிராப்பள்ளி
Answer: B) கும்பகோணம்
- பிச்சமூர்த்தியின் பெற்றோர் பெயர் என்ன?
A) சுதா, விஷ்ணு
B) நடேச தீட்சிதர், காமாட்சியம்மாள்
C) மகாலிங்கம், பௌமிகா
D) செந்தில், விஜயா
Answer: B) நடேச தீட்சிதர், காமாட்சியம்மாள்
- பிச்சமூர்த்தி எந்த கல்லூரியில் தத்துவத்தில் பட்டம் பெற்றார்?
A) சென்னை கல்லூரி
B) கும்பகோணம் கல்லூரி
C) திருச்சிராப்பள்ளி கல்லூரி
D) கோயம்புத்தூர் கல்லூரி
Answer: A) சென்னை கல்லூரி
- பிச்சமூர்த்தி எந்த சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்?
A) மும்பை சட்டக் கல்லூரி
B) சென்னை சட்டக் கல்லூரி
C) கும்பகோணம் சட்டக் கல்லூரி
D) திருவண்ணாமலையில் சட்டக் கல்லூரி
Answer: B) சென்னை சட்டக் கல்லூரி
- பிச்சமூர்த்தி எந்த ஆண்டு முதல் 1938 வரை வழக்கறிஞராக பணியாற்றினார்?
A) 1920
B) 1925
C) 1930
D) 1935
Answer: B) 1925
- பிச்சமூர்த்தி எந்த துறையில் 1939 முதல் 1959 வரை பணியாற்றினார்?
A) அரசியல்
B) இந்து சமய அறநிலையத்துறை
C) கல்வி
D) உடல்நலம்
Answer: B) இந்து சமய அறநிலையத்துறை
- பிச்சமூர்த்தி எந்த வருடம் திருமணம் செய்தார்?
A) 1920
B) 1925
C) 1930
D) 1935
Answer: B) 1925
- பிச்சமூர்த்தி எந்த புனைப் பெயரில் எழுதினார்?
A) கவி வரேந்தன்
B) பிக்ஷு ரேவதி
C) சுகன்
D) ரவீந்திரன்
Answer: B) பிக்ஷு ரேவதி
- பிச்சமூர்த்தி “காதல்” என்னும் புதுக்கவிதையை எப்போது எழுதியார்?
A) 1932
B) 1934
C) 1936
D) 1938
Answer: B) 1934
- பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்ச்சிறுகதை எது?
A) காதல்
B) முள்ளும் ரோஜாவும்
C) ஸயன்ஸ் க்குப் பாலி
D) குடும்ப ரகசியம்
Answer: C) ஸயன்ஸ் க்குப் பாலி
- பிச்சமூர்த்தி “மüllும் ரோஜாவும்” என்ற சிறுகதைக்கு பரிசு பெற்ற ஆண்டு எது?
A) 1932
B) 1934
C) 1936
D) 1938
Answer: B) 1934
- பிச்சமூர்த்தி “ஸ்ரீராமானுஜர்” என்ற திரைப்படத்தில் எது?
A) கதாநாயகன்
B) நடிப்பாளர்
C) வேடன்
D) இயக்குநர்
Answer: C) வேடன்
- பிச்சமூர்த்தி எந்த ஆன்மீக வழிகாட்டியிடம் உதவியை பெற்றார்?
A) ரமணா மஹரிஷி
B) மகரிஷி யோகானந்தா
C) சித்தர் குழந்தைசாமி
D) பத்தி சக்தி
Answer: A) ரமணா மஹரிஷி
- பிச்சமூர்த்தி எந்த இயக்கத்தில் ஈடுபட்டார்?
A) காந்தீய இயக்கம்
B) கம்யூனிசம்
C) சமூக இயக்கம்
D) சோசலிசம்
Answer: A) காந்தீய இயக்கம்
- பிச்சமூர்த்தியின் “காட்டுவாத்து” என்னும் தொகுப்பு எந்த வகை படைப்பு?
A) சிறுகதை
B) கட்டுரை
C) கவிதைத் தொகுப்பு
D) நாடகம்
Answer: C) கவிதைத் தொகுப்பு
- பிச்சமூர்த்தி எந்த பத்திரிக்கையில் எழுதியது?
A) பத்திரிகை மாலை
B) நவ இந்தியா
C) தமிழ் உலகம்
D) இந்தியா
Answer: B) நவ இந்தியா
- பிச்சமூர்த்தியின் “பிச்சமூர்த்தியின் கதைகள்” எந்த வகை படைப்பு?
A) நாடகம்
B) கவிதைகள்
C) சிறுகதைகள்
D) கட்டுரைகள்
Answer: C) சிறுகதைகள்
- பிச்சமூர்த்தி “காளி” என்ற நாடகம் எப்போது வெளியானது?
A) 1925
B) 1930
C) 1940
D) 1950
Answer: C) 1940
- பிச்சமூர்த்தி எந்த வயதில் மறைந்தார்?
A) 60
B) 70
C) 76
D) 80
Answer: C) 76
TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE