Tamil Poet Perunjithiranar Biography | TNPSC Tamil Academy | பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு
அறிமுகம்:
Tamil Poet Perunjithiranar Biography | TNPSC Tamil Academy | பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு | பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

பிறப்பு:
பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்ற ஊரில் 10/03/1933-இல் பிறந்தார். இவரது இயற்பெயர் துரை மாணிக்கம் ஆகும்.
இவரது வாழ்க்கைத்துணைவியின் பெயர் தாமரை ஆகும். இவருக்கு பொற்கொடி, தேன்மொழி, பூங்குன்றன், சித்திரைசெந்தாழை, பிறைநுதல் என ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.
பெற்றோர்:
இவரது பெற்றோர் பெயர் தெரிய வரவில்லை.
வாழ்க்கை வரலாறு:
தமிழ்நாட்டை சேர்ந்த தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் தம்ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் 40-கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். இவர் குமுகாய – அரசியல் காலத்தில் சாதி எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு, தனித் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு ஆதரவாக செறிவுடன் பணியாற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர் ஆவார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்க்கப்பட்டது.
1950-இல் இவர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சேலம் நகராண்மை கல்லூரியில் தற்போது )சேலம் அரசினர் கலைக்கல்லூரி
) பணியாற்றினார்
கல்லூரிக்கு பின் 1952 முதல் 1954 வரை சேலம் கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளராகவும், கணக்காய்வாளராகவும் பணியாற்றினார். 1954-இல் பாண்டிச்சேரிக்கு சென்று அஞ்சல் துறையில் எழுத்தராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
1964 முதல் 1965 வரை கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகவும் பணியாற்றினார்.
ராஜீவ் காந்தி படுகொலையைதொடர்ந்து எழுதிய ஒரு பாவியத்தை கரணம் காட்டி 26 ஜனவரி 1993 அன்று சிறை சென்றார். மொத்தம் 20 முறைக்கு மேலாக சிறைக்கு சென்றுள்ளார். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளை செய்து விட்டார் அவற்றில் ஒன்று திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகும்.
இவர் ஈழ தமிழர்களை நேரடியாகவே ஆதரித்தார். அதை தம் பாடல்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.
சிறப்பு பெயர்:
இவருக்கு பாவலரேறு என்ற சிறப்புப்பெயரை பாவாணர் அவர்கள் சூட்டி மகிழ்ந்தார்
நடத்திய இதழ்கள்:
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்ற இதழ்களை நடத்தினார்.
இயற்றிய நூல்கள்:
நூறாசிரியம், பாவிய கொத்து, கொய்யாகனி, பள்ளிப்பறவைகள், மகபுகுவஞ்சி, அறுபருவத்திருக்கூத்து, ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், இட்ட சாவம் முட்டியது, இனம் ஒன்றுபட வேண்டும் என்வது எதற்கு?, இலக்கிய துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்க பணிகள், இளமை உணர்வுகள், கழுதை அழுத கதை, இளமை விடியல், எண்சுவை எண்பது, உலகியல் நூறு, ஐயை (பாவியம்), சாதித்தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும், சாதி ஒழிப்பு, நெருப்பாற்றில் எதிர் நீச்சல், பாச்சோறு, குழந்தை பாடல்கள், அருளி, பெரியார், மொழி ஞாயிறு பாவாணர், வாழ்வியல் முப்பது, வேண்டும் விடுதலை, திருக்குறள் மெய்பொருளுரை போன்ற 40 கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சிறப்புகள்:
தமிழுக்கு கருவூலமாய் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது பாடல்கள் திருக்குறள் மெய்பொருளுரை ஆகும்.
தமிழுணர்வு மிக்க பாடல்களை கொண்ட நூல் கனிச்சாறு ஆகும்.
மறைவு:
இவர் குருதி அழுத்தக் குறைவு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தனது 63 ஆவது வயதில் 11/06/1995 இல் சென்னை தியாகராய நகரில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் 150000 பேர் பங்கேற்றனர். இவரது உடல் மேடவாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
TNPSC Model Questions and Answers :
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
(A) மதுரை
(B) சேலம்
(C) கோயம்புத்தூர்
(D) திருச்சி
Answer (B) சேலம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
(A) துரை செந்தமிழ்
(B) துரை மாணிக்கம்
(C) துரை சங்கரன்
(D) துரை சிவமணி
Answer (B) துரை மாணிக்கம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கைத்துணை பெயர் என்ன?
(A) தமிழ்ச்சுடர்
(B) சங்கமித்ரா
(C) தாமரை
(D) பொற்கொடி
Answer (C) தாமரை
- பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு எத்தனை பிள்ளைகள்?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
Answer (D) 6
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தார்?
(A) 1948
(B) 1950
(C) 1952
(D) 1954
Answer (B) 1950
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த கல்லூரியில் கல்வி கற்றார்?
(A) சென்னை பல்கலைக்கழகம்
(B) மதுரை கல்லூரி
(C) சேலம் அரசினர் கலைக்கல்லூரி
(D) திருவண்ணாமலை கல்லூரி
Answer (C) சேலம் அரசினர் கலைக்கல்லூரி
- 1952-1954 காலகட்டத்தில் அவர் எந்த துறையில் பணியாற்றினார்?
(A) காவல்துறை
(B) கூட்டுறவு துறை
(C) அஞ்சல் துறை
(D) கல்வித்துறை
Answer (B) கூட்டுறவு துறை
- 1954-இல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த நகருக்கு இடம்பெயர்ந்தார்?
(A) சென்னை
(B) மதுரை
(C) பாண்டிச்சேரி
(D) திருச்சி
Answer (C) பாண்டிச்சேரி
- 1964-1965 காலகட்டத்தில் அவர் எந்த பதவியில் பணியாற்றினார்?
(A) எழுத்தர்
(B) கணக்காய்வாளர்
(C) துணை அஞ்சல் தலைவர்
(D) மேற்பார்வையாளர்
Answer (C) துணை அஞ்சல் தலைவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் மொத்தம் எத்தனை தடவைகள் சிறைக்கு சென்றுள்ளார்?
(A) 10
(B) 15
(C) 20
(D) 25
Answer (C) 20
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த காரணத்தால் 26 ஜனவரி 1993 அன்று சிறை சென்றார்?
(A) தமிழர் உரிமை போராட்டம்
(B) சாதி எதிர்ப்பு
(C) ஒரு பாவியத்தை கரணம் காட்டி
(D) அரசியல் கருத்துரையால்
Answer (C) ஒரு பாவியத்தை கரணம் காட்டி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த தலைவரால் “பாவலரேறு” என அழைக்கப்பட்டார்?
(A) பாரதிதாசன்
(B) அண்ணாதுரை
(C) பாவாணர்
(D) பெரியார்
Answer (C) பாவாணர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் ஒன்று எது?
(A) தமிழ் மொழிக்கானல்
(B) தமிழ்நிலம்
(C) சுதந்திர தீபம்
(D) திராவிட சக்தி
Answer (B) தமிழ்நிலம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த நூலை எழுதியுள்ளார்?
(A) பாரதியார் கவிதைகள்
(B) திருக்குறள் மெய்பொருளுரை
(C) தமிழர் வரலாறு
(D) திராவிட முன்னேற்றம்
Answer (B) திருக்குறள் மெய்பொருளுரை
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழுக்கு உருவாக்கிய முக்கிய நூல் எது?
(A) மொழிப்பணிகள்
(B) கனிச்சாறு
(C) தமிழர் களஞ்சியம்
(D) தமிழ் எழுச்சி
Answer (B) கனிச்சாறு
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த இலக்கிய வகையில் அதிகம் எழுதியுள்ளார்?
(A) புதினங்கள்
(B) நாடகங்கள்
(C) கவிதைகள்
(D) அரசியல் கட்டுரைகள்
Answer (C) கவிதைகள்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த போராட்டங்களில் பங்கேற்றார்?
(A) இந்திய விடுதலை இயக்கம்
(B) சாதி எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு
(C) பசுமை இயக்கம்
(D) தொழிலாளர் போராட்டம்
Answer (B) சாதி எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த நோயால் பாதிக்கப்பட்டார்?
(A) இதய நோய்
(B) சிறுநீரக செயலிழப்பு
(C) புற்றுநோய்
(D) கல்லீரல் பாதிப்பு
Answer (B) சிறுநீரக செயலிழப்பு
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைந்த ஆண்டு எது?
(A) 1992
(B) 1995
(C) 1998
(D) 2000
Answer (B) 1995
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர்?
(A) 50,000
(B) 1,00,000
(C) 1,50,000
(D) 2,00,000
Answer (C) 1,50,000
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்?
(A) சேலம்
(B) மேடவாக்கம்
(C) சென்னை மரைனா
(D) திருவள்ளூர்
Answer (B) மேடவாக்கம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த வகை அரசியல் கருத்துகளுக்கு ஆதரவாக இருந்தார்?
(A) தேசிய ஒருமைப்பாடு
(B) தனித் தமிழ்நாடு
(C) சமத்துவ அரசு
(D) கம்யூனிசம்
Answer (B) தனித் தமிழ்நாடு
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த பிரச்சினைக்கு எதிராக எழுந்தார்?
(A) பெண் கல்வி
(B) சாதி
(C) கல்வி கொள்கை
(D) தொழிலாளர் உரிமை
Answer (B) சாதி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த நூலை எழுதியுள்ளார்?
(A) சாதித்தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
(B) பாரதியின் கவிதைகள்
(C) தமிழ் இலக்கிய வரலாறு
(D) இந்திய சுதந்திரம்
Answer (A) சாதித்தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்த அமைப்புக்கு பெரும் ஆதரவளித்தார்?
(A) காங்கிரஸ்
(B) திராவிட முன்னேற்ற கழகம்
(C) தமிழீழ ஆதரவு இயக்கம்
(D) பாரதிய ஜனதா
Answer (C) தமிழீழ ஆதரவு இயக்கம்
TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE