சொல் இலக்கணம் அதன் மற்றும் இலக்கண வகையில் வகைகள் மற்றும் விளக்கங்கள் | Tamil Grammar | Sol Ilakkanam Explanation | Part 5
Tamil Grammer Sol Ilakkanam | சொல் இலக்கணம் நான்கு வகைப்படும். அவை இலக்கண வகையில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்,உரிச்சொல் என 4 வகைப்படும், மற்றும் சொல் இலக்கணம் இலக்கிய வகையிலும் இயற்சொல், திரிசொல் , திசைசொல், வடசொல் 4 வகைப்படும் அவற்றை பற்றி தற்போது காணலாம்.

- சொல் இலக்கணம்:
- இலக்கண வகையில் அதன் வகைகள்:
- பெயர்ச்சொல் :
- பெயர்ச்சொல் வகைகள்:
- பொருட்பெயர்:
- இடப்பெயர் :
- காலப்பெயர்:
- சினைப்பெயர் :
- பண்புப்பெயர்:
- தொழிற்பெயர்:
- தொழிற்பெயர் மூன்று வகைப்படும்:
- விகுதி பெற்ற தொழிற்பெயர்:
- முதனிலை தொழிற்பெயர்:
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
- எதிர்மறை தொழிற்பெயர்:
- வினைச்சொல் :
- இடைச்சொல்:
- உரிச்சொல்:
- TNPSC தேர்விற்கான Model (MCQ) வினாக்கள் மற்றும் விடைகள்:
சொல் இலக்கணம்:
ஒரு எழுத்து தனியாக நின்று பொருள் தரும் அல்லது பல எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
கை , தை , மலர், பூனை
சொல்லிருக்கு மொழி, கிளவி, பதம் வேறு சில பெயர்களும் உள்ளது.
இலக்கண வகையில் அதன் வகைகள்:
பெயர்ச்சொல் :
ஒரு சொல் எதாவது ஒன்றன் பெயரை குறித்தால் பெயர்ச்சொல். அந்த பெயர்உயர்திணை அல்லது அஃ றிணையாக இருக்கலாம்.
உயர்திணை – மனிதன் மட்டுமே உயர்திணை
அஃ றிணை- மனிதனை தவிர மற்ற அனைத்தும் அஃ றிணை ஆகும்.
எடுத்துக்காட்டு:
பள்ளி, பாரதி, கல்லூரி
பெயர்ச்சொல் வகைகள்:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்:
- பொருட்பெயர்,
- இடப்பெயர்,
- காலப்பெயர்,
- சினைப்பெயர்,
- பண்புப்பெயர், ( குணப்பெயர்)
- தொழிற்பெயர்
பொருட்பெயர்:
ஒரு சொல்லானது ஒன்றன் பொருளின் பெயரைக் குறித்தால் பொருட்பெயர். உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்களின் பெயர்களை குறிக்கும்.
எடுத்துக்காட்டு:
நாற்காலி, செல்வம் , மரம்
இடப்பெயர் :
ஒரு சொல்லானது இடத்தை குறிக்குமானால் அது இடப்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
சேலம், சென்னை, பள்ளி.
காலப்பெயர்:
ஒரு சொல்லானது காலத்தை குறிக்குமானால் அது காலப்பெயர் எனப்படும்,
எடுத்துக்காட்டு:
கார்காலம், ஜனவரி, தை.
சினைப்பெயர் :
ஒரு சொல்லானது பொருளின் உறுப்புகளை குறிக்குமானால் அது சினைப்பெயர் எனப்படும்.
சினைப்பெயர் உறுப்புப்பெயர் என்றும் அழைக்கப்படுகிறது.
காய், கிளை, கண்.
பண்புப்பெயர்:
ஒரு சொல்லானது ஒன்றன் பண்பை அல்லது குணத்தை குறிக்குமானால் பண்புப்பெயர் அல்லது குணப்பெயர் என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு:
வட்டம், சதுரம், நல்லவன், நன்மை.
தொழிற்பெயர்:
ஒரு தொழில் நிகழ்வதை கூறுவது தொழிற்பெயர் எனப்படும்.
தொழிற்பெயர் ஆல், தல் போன்ற விகுதிகளை கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு:
ஆடுதல், ஓடுதல், பாடுதல்.
தொழிற்பெயர் மூன்று வகைப்படும்:
அவை:
- விகுதி பெற்ற தொழிற்பெயர்,
- முதனிலை தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
விகுதி பெற்ற தொழிற்பெயர்:
ஒரு தொழிற்பெயர் விகுதி பெற்று முடிந்தால் அது விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
நடத்தல், ஆடுதல்.
முதனிலை தொழிற்பெயர்:
ஒரு தொழிற்பெயரானது விகுதி இல்லாமல் பகுதியை மற்றும் பெற்றிருக்குமானால் முதனிலை தொழிற்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அடி , விடு
முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
முதனிலை தொழிற்பெயரில் முதல் எழுத்தானது குறில் எழுத்தானது நெடில் எழுத்தாக திரிந்தால் அது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அடி – ஆடி
விடு – வீடு
எதிர்மறை தொழிற்பெயர்:
ஒரு செயலை எதிர்மறையாக கூறும் தொழிற்பெயர் எதிர்மறை தொழிற்பெயர் எனப்படும்.
வணங்குதல்-வணங்காமை
விடுதல் – விடாமை
அடித்தல் – அடிக்காமை
வினைச்சொல் :
ஒரு வினையை (வேலையை) குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும்.
வினை – செயல்
ஒரு சொல் எதாவது ஒரு செயலை குறித்தால் அது வினைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
வா , பாடு , எழுது , படி
இடைச்சொல்:
சொல்லில் இடையில் வரும் சொல் இடைச்சொல் எனப்படும்.
இடைச்சொற்கள்: உம் , ஐ , மற்று
இது பெயர்ச்சொல்லுக்கு பின்னோ அல்லது வினை சொல்லுக்கு பின்னோ சேர்ந்து வரும். ஆதலால் இடைச்சொல் என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
அவனை, நானும்.
உரிச்சொல்:
பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் மிகுதிப்படுத்தி சொல்லுவது உரிச்சொல் ஆகும்.
உரிச்சொற்கள்: சால , உறு , நனி , தவ
சொல் – உரிச்சொல்
TNPSC தேர்விற்கான Model (MCQ) வினாக்கள் மற்றும் விடைகள்:
- சொல் எனப்படுவது எது?
- ஒரு எழுத்து மட்டும்
b) பல எழுத்துகள் சேர்ந்து பொருள் தருவது
c) சொற்றொடர்
d) இலக்கண விதி
- ஒரு எழுத்து மட்டும்
விடை: b) பல எழுத்துகள் சேர்ந்து பொருள் தருவது
- சொல்லிற்கு வேறு என்ன பெயர்கள் உள்ளன?
- மொழி
b) கிளவி
c) பதம்
d) மேலே உள்ள அனைத்தும்
- மொழி
விடை: d) மேலே உள்ள அனைத்தும்
- பெயர்ச்சொல் எதை குறிக்கும்?
- செய்யுள்
b) உரிச்சொல்
c) பொருளின் பெயரை குறிக்கும் சொல்
d) அடையாளச்சொல்
- செய்யுள்
விடை: c) பொருளின் பெயரை குறிக்கும் சொல்
- பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
- 4
b) 5
c) 6
d) 7
- 4
விடை: c) 6
- உயர்திணை என்பது யாரை குறிக்கும்?
- மனிதன் மட்டும்
b) விலங்குகள்
c) மரங்கள்
d) பொருட்கள்
- மனிதன் மட்டும்
விடை: a) மனிதன் மட்டும்
- அஃறிணை என்பதன் பொருள் என்ன?
- மனிதனை தவிர அனைத்தும்
b) மனிதர்கள் மட்டும்
c) பெயர் கொண்ட இடம்
d) பெயர் கொண்ட காலம்
- மனிதனை தவிர அனைத்தும்
விடை: a) மனிதனை தவிர அனைத்தும்
- “பள்ளி” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) இடப்பெயர்
c) காலப்பெயர்
d) பண்புப்பெயர்
- பொருட்பெயர்
விடை: b) இடப்பெயர்
- பொருட்பெயர் எதை குறிக்கிறது?
- காலத்தை குறிக்கும் பெயர்
b) இடத்தைக் குறிக்கும் பெயர்
c) பொருளின் பெயரை குறிக்கும் பெயர்
d) செயலை குறிக்கும் பெயர்
- காலத்தை குறிக்கும் பெயர்
விடை: c) பொருளின் பெயரை குறிக்கும் பெயர்
- கீழ்கண்டவற்றில் எது பொருட்பெயர்?
- செல்வம்
b) செம்மல்
c) சிறப்புக்கேடு
d) செயல்
- செல்வம்
விடை: a) செல்வம்
- “சென்னையை” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) பண்புப்பெயர்
- பொருட்பெயர்
விடை: c) இடப்பெயர்
- “கார்காலம்” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிற்பெயர்
- பொருட்பெயர்
விடை: b) காலப்பெயர்
- சினைப்பெயர் எதை குறிக்கிறது?
- ஒரு பொருளின் உறுப்புகளை
b) காலத்தை
c) ஒரு செயலை
d) ஒரு இடத்தை
- ஒரு பொருளின் உறுப்புகளை
விடை: a) ஒரு பொருளின் உறுப்புகளை
- “கண்” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) சினைப்பெயர்
c) பண்புப்பெயர்
d) தொழிற்பெயர்
- பொருட்பெயர்
விடை: b) சினைப்பெயர்
- பண்புப்பெயர் எதை குறிக்கிறது?
- ஒரு பொருளின் பண்பு
b) ஒரு இடம்
c) ஒரு காலம்
d) ஒரு செயல்
- ஒரு பொருளின் பண்பு
விடை: a) ஒரு பொருளின் பண்பு
- “அழகு” எந்த வகை பெயர்ச்சொல்?
- பண்புப்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிற்பெயர்
- பண்புப்பெயர்
விடை: a) பண்புப்பெயர்
- “அன்பு” எந்த வகை பெயர்ச்சொல்?
- பண்புப்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிற்பெயர்
- பண்புப்பெயர்
விடை: a) பண்புப்பெயர்
- காலப்பெயர் எதை குறிக்கிறது?
- ஒரு இடம்
b) ஒரு காலம்
c) ஒரு செயல்
d) ஒரு தன்மை
- ஒரு இடம்
விடை: b) ஒரு காலம்
- “தை” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) இடப்பெயர்
d) தொழிற்பெயர்
- பொருட்பெயர்
விடை: b) காலப்பெயர்
- “மரம்” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) காலப்பெயர்
c) பண்புப்பெயர்
d) தொழிற்பெயர்
- பொருட்பெயர்
விடை: a) பொருட்பெயர்
- “காய்” எந்த வகை பெயர்ச்சொல்?
- பொருட்பெயர்
b) சினைப்பெயர்
c) பண்புப்பெயர்
d) தொழிற்பெயர்
- பொருட்பெயர்
விடை: b) சினைப்பெயர்
- பண்புப்பெயர் எதை குறிக்கிறது?
- பொருளின் பெயரை
b) ஒரு செயலை
c) ஒருவரின் பண்பை அல்லது குணத்தை
d) காலத்தை
- பொருளின் பெயரை
விடை: c) ஒருவரின் பண்பை அல்லது குணத்தை
- கீழ்கண்டவற்றில் எது பண்புப்பெயர்?
- மரம்
b) நல்லவன்
c) பாடுதல்
d) விடு
- மரம்
விடை: b) நல்லவன்
- தொழிற்பெயர் எதை குறிக்கிறது?
- ஒரு இடத்தை
b) ஒரு காலத்தை
c) ஒரு தொழில் நிகழ்வதை
d) ஒரு உருப்படியை
- ஒரு இடத்தை
விடை: c) ஒரு தொழில் நிகழ்வதை
- தொழிற்பெயர் எந்த விகுதிகளை கொண்டிருக்கும்?
- ஆல், தல்
b) நீ, ஆ
c) யா, னா
d) லே, டே
- ஆல், தல்
விடை: a) ஆல், தல்
- “ஓடுதல்” எந்த வகை பெயர்ச்சொல்?
- பண்புப்பெயர்
b) தொழிற்பெயர்
c) காலப்பெயர்
d) இடப்பெயர்
- பண்புப்பெயர்
விடை: b) தொழிற்பெயர்
- தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
- 2
b) 3
c) 4
d) 5
- 2
விடை: b) 3
- விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
- விகுதி இல்லாத பெயர்
b) விகுதி பெற்ற தொழிற்பெயர்
c) ஒரே பெயர் இரண்டாக பிரிக்கப்பட்டது
d) திரிந்து வந்த பெயர்
- விகுதி இல்லாத பெயர்
விடை: b) விகுதி பெற்ற தொழிற்பெயர்
- விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம் எது?
- நடத்தல்
b) வீடு
c) கழு
d) கனி
- நடத்தல்
விடை: a) நடத்தல்
- முதனிலை தொழிற்பெயர் எதனை கொண்டிருக்கும்?
- விகுதி
b) விகுதி இல்லாமல் பகுதியை
c) காலப்பெயர்
d) இடப்பெயர்
- விகுதி
விடை: b) விகுதி இல்லாமல் பகுதியை
- முதனிலை தொழிற்பெயருக்கு உதாரணம் எது?
- அடித்தல்
b) ஓடுதல்
c) அடி
d) பாடுதல்
- அடித்தல்
விடை: c) அடி
- முதனிலை திரிந்த தொழிற்பெயர் எதனை குறிக்கிறது?
- விகுதி பெற்ற பெயர்
b) குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாற்றிய பெயர்
c) காலத்தை குறிக்கும் பெயர்
d) இடத்தைக் குறிக்கும் பெயர்
- விகுதி பெற்ற பெயர்
விடை: b) குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாற்றிய பெயர்
- “அடி – ஆடி” எந்த வகை பெயர்ச்சொல்?
- விகுதி பெற்ற தொழிற்பெயர்
b) முதனிலை தொழிற்பெயர்
c) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
d) இடப்பெயர்
- விகுதி பெற்ற தொழிற்பெயர்
விடை: c) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- எதிர்மறை தொழிற்பெயர் எதை குறிக்கிறது?
- நேர்மறையாக செயலை கூறுவது
b) எதிர்மறையாக செயலை கூறுவது
c) இடப்பெயர்
d) காலப்பெயர்
- நேர்மறையாக செயலை கூறுவது
விடை: b) எதிர்மறையாக செயலை கூறுவது
- “வணங்குதல் – வணங்காமை” எந்த வகை பெயர்ச்சொல்?
- எதிர்மறை தொழிற்பெயர்
b) விகுதி பெற்ற தொழிற்பெயர்
c) முதனிலை தொழிற்பெயர்
d) பண்புப்பெயர்
- எதிர்மறை தொழிற்பெயர்
விடை: a) எதிர்மறை தொழிற்பெயர்
- வினைச்சொல் எதை குறிக்கிறது?
- ஒரு பெயரை
b) ஒரு செயலை
c) ஒரு காலத்தை
d) ஒரு இடத்தை
- ஒரு பெயரை
விடை: b) ஒரு செயலை
- “வா” எந்த வகை பெயர்ச்சொல்?
- வினைச்சொல்
b) பண்புப்பெயர்
c) தொழிற்பெயர்
d) உரிச்சொல்
- வினைச்சொல்
விடை: a) வினைச்சொல்
- இடைச்சொல் எதை குறிக்கிறது?
- ஒரு செயலை
b) சொல்லுக்கு இடையில் வரும் சொல்
c) பெயர்ச்சொல்
d) காலப்பெயர்
- ஒரு செயலை
விடை: b) சொல்லுக்கு இடையில் வரும் சொல்
- இடைச்சொல் எங்கு வரும்?
- பெயர்ச்சொல்லுக்கு முன்
b) பெயர்ச்சொல்லுக்கு பின்
c) வினைச்சொல்லுக்கு முன்
d) பெயர்ச்சொல்லுக்கு பின்னோ, வினைச்சொல்லுக்கு பின்னோ
- பெயர்ச்சொல்லுக்கு முன்
விடை: d) பெயர்ச்சொல்லுக்கு பின்னோ, வினைச்சொல்லுக்கு பின்னோ
- “நானும்” இங்கு “உம்” என்ன?
- வினைச்சொல்
b) பெயர்ச்சொல்
c) இடைச்சொல்
d) காலப்பெயர்
- வினைச்சொல்
விடை: c) இடைச்சொல்
- உரிச்சொல் எதை குறிக்கிறது?
- பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் மிகுதிப்படுத்தி கூறுவது
b) பெயர்ச்சொல்லின் பொருள்
c) காலப்பெயர்
d) இடப்பெயர்
- பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் மிகுதிப்படுத்தி கூறுவது
விடை: a) பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் மிகுதிப்படுத்தி கூறுவது
For More TNPSC Notes : CLICK HERE