தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை
தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை

 

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை | தமிழ் இலக்கணத்தில் இங்கு மெய்ம்மயக்கம் அதன் வகைகளான உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம், சிறப்பு எழுத்துக்கள், சுட்டெழுத்துக்கள் அதன் வகைகள், மற்றும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள், மொழிக்கு இறுதி எழுத்துக்கள் பற்றி விரிவான விளக்கங்களை காணலாம்.

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை
தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 | மெய்ம்மயக்கம் வகைகள் | சிறப்பு எழுத்துக்கள் | சுட்டெழுத்துக்கள் | மொழி முதல், இறுதி எழுத்துக்கள் | விளக்கவுரை

 

உடனிலை மெய்ம்மயக்கம் :

தன் எழுத்துக்களுடன் மட்டும் சேர்ந்து வரும் எழுத்துக்களை உடனிலை மெய்ம்மயக்கம் என்கிறோம். அவை க் , ச் , த் , ப் போன்ற எழுத்துக்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு:

பக்கம், அச்சம், மொத்தம், அப்பளம்.

 

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்:

தன எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.

அவை ர் , ழ் போன்ற எழுத்துக்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு:

சார்பு, வாழ்க்கை

 

தன எழுத்து மற்றும் பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் எழுத்துக்களும் உள்ளன. அவை ற், ன் ஆகும்.

எடுத்துக்காட்டு:

குற்றம், மேற்கு, அன்பு, அன்னம்.

 

சிறப்பு எழுத்துக்கள்:

தமிழில் சிறப்பு எழுத்துக்கள் 5 உள்ளன. அவை

ற, ன, ழ, எ, ஒ .

 

இவை வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் ஆதலால் சிறப்பு எழுத்துக்கள் என்கிறோம்.

 

எ , ஒ தேவநாகரியில் இல்லாதவை, ஆதலால் இவை இரண்டும் பாதி உயிர் என்று மொழி வல்லார்கள் கூறுகிறார்கள்.

 

தமிழ் சொற்களும், வட சொற்களும் கலந்த நிலை மணிப்பிரவளம் என்று பெயர்.

 

சுட்டெழுத்துக்கள்:

சுட்டெழுத்துக்கள் மூன்று உள்ளன. அவை அ, இ, உ ஆகும்.

 

தற்போது பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து – உ

தொலைவில் இருக்கும் பொருளை குறிக்கும் சுட்டெழுத்து – அ

அருகில் இருக்கும் பொருளை குறிக்கும் சுட்டெழுத்து – இ

அருகில் அல்லது தொலைவில் இடையில் உள்ள தொலைவை குறிக்கும் சுட்டெழுத்து – உ

 

சுட்டெழுத்து வகைகள்:

சுட்டெழுத்து 4 வகைப்படும். அவை அகச்சுட்டு , புறச்சுட்டு, அண்மை சுட்டு, சேய்மை சுட்டு ஆகும்.

 

அகச்சுட்டு:

ஒரு வார்த்தையில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தராது. இதுவே அகச்சுட்டு ஆகும்.

எடுத்துக்காட்டு:

அவன், இவன், அது, இது.

 

புறச்சுட்டு:

ஒரு வார்த்தையில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இவையே புறச்சுட்டு ஆகும்.

எடுத்துக்காட்டு:

அந்நீர் வீழ்ச்சி , இந்நூல் , இம்மலை

 

அண்மை சுட்டு:

அருகில் உள்ள பொருட்களை குறிப்பதால் அண்மை சுட்டு என்கிறோம்.

எடுத்துக்காட்டு:

இவன், இவர், இது,இவை,இம்மரம்.

 

சேய்மை சுட்டு:

தொலைவில் உள்ள பொருட்களை குறிப்பதால் சேய்மை சுட்டு என்கிறோம்.

எடுத்துக்காட்டு:

அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்.

 

 

சுட்டுத்திரிபு:

அம்மரம், இவ்வீடு, இப்பள்ளி – இவற்றில் அ , இ ஆகிய சுட்டெழுத்துக்கள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன ஆதலால் இதனை சுட்டுத்திரிபு என்கிறோம்.

 

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்:

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22 எழுத்துக்கள் உள்ளன.

உயிர் எழுத்துக்கள்: 12

உயிர்மெய் எழுத்துக்கள்: க , ச , த , ந , ப ம

உயிர்மெய் எழுத்துக்களில் சில எழுத்துக்களில் மட்டும் வரும்: ங ,ஞ , ய , வ

மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள்:

மெய் எழுத்துக்கள்: 18

ட , ண , ர , ல , ழ , ள , ற , ன

ஆய்த எழுத்து: – 1

 

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்:

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 24 உள்ளன.

உயிர் எழுத்து – 12

மெய் எழுத்து – 11

குற்றியலுகரம் – 1

எடுத்துக்காட்டு: பொன் , மண், உரிஞ் , வெரிந்  ( வெரிந்  -முதுகு ).

 

For More TNPSC Notes – CLICK HERE

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply