தமிழ் இலக்கணத்தின் பயன்கள் | தமிழ் இன எழுத்துக்கள் |மெய்ம்மயக்கம் | முழு விளக்கவுரை | Tamil Grammar Part 1
Tamil Grammar | TNPSC Tamil Grammar Guide | Part 1 | இங்கு தமிழ் இலக்கணத்தின் பயன்கள், தமிழ் இன எழுத்துக்கள், மெய்ம்மயக்கம் பற்றிய முழு தகவல்களை பார்க்கலாம்.
இலக்கணத்தின் பயன்கள்:
எழுத்துக்களை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பயன்படுவது இலக்கணம் ஆகும். நாம் பேசும் மொழியை முறையாக புரிந்துகொள்ள இலக்கணம் பயன்படுகிறது.
இலக்கணம் சொல், பொருள், எழுத்து, யாப்பு, அணி என ஐந்து வகைப்படும்
எழுத்திலக்கணம் முதல் எழுத்து, சார்பெழுத்து என இரு வகை உண்டு.
முதல் எழுத்து மொத்தம் 30 எழுத்துக்கள் ஆகும். உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆகும்.
உயிர் எழுத்து அ முதல் ஒள வரை.
மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என 3 வகை உண்டு.
மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடம்:
வல்லின எழுத்துக்கள் மார்பில் பிறக்கிறது.
மெல்லின எழுத்துக்கள் மூக்கில் பிறக்கிறது.
இடையின எழுத்துக்கள் கழுத்தில் பிறக்கிறது.
மாத்திரை:
எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு மாத்திரை என்கிறோம்.
மாத்திரையின் நேரம் :
மெய்யெழுத்துக்கள் ஒலிக்க ஆகும் நேரம் அரை மாத்திரை ஆகும்.
குறில் எழுத்துக்கள் ஒலிக்க 1 மாத்திரை நேரம் ஆகும்.
நெடில் எழுத்துக்கள் ஒலிக்க 2 மாத்திரை நேரம் ஆகும்.
ஆய்த எழுத்து ஒலிக்க அரை மாத்திரை நேரம் ஆகும்.
தமிழ் இன எழுத்துக்கள்:
ஓர் எழுத்து தான் பிறக்கும் இடம் ஒலிக்கும் முயற்சி, ஒலிக்கும் நேரம் இவற்றில் ஒன்றால் மற்றோர் எழுத்தை ஒத்திருப்பின் அவை இன எழுத்துக்கள் ஆகும்.
உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்துக்களுக்கு அவற்றின் நெடில் எழுத்துக்கள் இன எழுத்துக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு :
அ – ஆ
இ – ஈ
உ -ஊ
எ -ஏ
ஒ -ஓ
ஐ -இ
ஒள -உ
வல்லின எழுத்துக்களுக்கு மெல்லின எழுத்துக்கள் இன எழுத்துக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு :
க -ங – தங்கம், மங்கை
ச-ஞ – மஞ்சள், வஞ்சம்
ட-ண – பண்டாரம், கண்டு
த-ந -தந்தி, பந்து
ப-ம -கம்பு, கும்பம்
ற-ன – தென்றல், நன்றி
இடையின எழுத்துக்களுக்கு எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தால் அவை இன எழுத்துக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு :
ய ர ல வ ழ ள
1.கொய்யா
2.வெல்லம்
3.பள்ளம்
4.செவ்வாய்
மெய்ம்மயக்கம்:
மெய்ம்மயக்கம் அல்லது மெய் மயக்கம் அல்லது தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லில் மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை குறிக்கும்.
அதிகப்படியாக இரு மெய் எழுத்துக்கள் இனைந்து வரும். அரிதாகவே மூன்று மெய் எழுத்துக்கள் இனைந்து வரும்.
இரு மெய்கள் இனைந்து வருவதை மெய்ம் மயக்கம் என்றும் மூன்று மெய்கள் இனைந்து வருவதை ஈரொற்று மயக்கம் என்றும் கூறுவர்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்.
For More TNPSC Guide – CLICK HERE