உவமை கவிஞர் சுரதா ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு
அறிமுகம் :
உவமை கவிஞர் சுரதா ஆசிரியர் குறிப்பு | கவிஞர் சுரதா அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்
பிறப்பு :
கவிஞர் சுரதா அவர்கள் 23/11/1921 இல் தஞ்சாவூர் மாவட்டம் பழையனுரில் (சிக்கல்) பிறந்தார்.
பெற்றோர் :
இவரது பெற்றோர் பெயர் திருவேங்கடம் – செண்பகம் அம்மையார் ஆவார்,
வாழ்க்கை வரலாறு :
இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கல்லாடம் என்ற மகனும் உள்ளனர்,
கவிஞர் சுரதா அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தமிழ் இலக்கணங்களைக் கற்று தேர்ந்தார், சீர்காழி அருணாச்சல தேசிகர் என்பவர் தமிழ் இலக்கணங்களைக் சுரதா அவர்களுக்கு கற்று கொடுத்தார்,
சுரதா அவர்கள் தமிழ் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்,
1941 ஜனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் கண்டு அவருடன் சில காலம் தங்கியிருந்து அவரது கவிதை பணிக்கு துணையை இருந்துள்ளார்,
சுரதாவின் கவிதை ஒன்று புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழில் 1947 ஏப்ரல் மதம் வெளிவந்து இவரை பாரதிதாசன் பரம்பரை கவிஞராக அறிமுகம் செய்தது.
சுரதாவின் கலையுணர்வினை கண்டா கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்தார், 1944 ஆம் ஆண்டு மங்கையற்கரசி எனும் திரைப்படத்திற்கு முதன்முதலில் உரையாடல் எழுதினார், மிக குறைந்த அளவு பாடல்களையே எழுதியுள்ளார், 100க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார், புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். துணைவன் இதழின் ஆசிரியர் நாராயணன் என்பவர் ஆவர்,
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்கவிஞர் பெருமன்றத்திற்கு தலைவராக 1966இல் தேர்ந்துடுக்கப்பட்டார்,
சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம், இதனை வி, ஆர்.எம், செட்டியார் என்பவர் 1946 மார்ச் மதம் வெளியிட்டார்.
1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நுழை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்,
1971 -இல் ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளில் அக வாழ்க்கையை பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பை பெற்றன. பின்னர் இக்கவிதைகள் தொகுக்க பட்டு சுவரும், சுண்ணாம்பும் என்ற பெயரில் நூலக வெளிவந்துள்ளது.
சிறப்பு பெயர் :
தேன்மழை என்ற கவிதை நூலுக்கு 1969 இல் தமிழக அரசின் பரிசு கிடைத்தது, 1972- தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2007- இல் இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்துக்கு பத்து லட்சம் பரிசுத்தொகை வழங்கியுள்ளது.
1982-இல் சுரதாவின் கவிதை பணிகளை பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது. 1990-இல் கேராவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்கு கிடைத்தது.
29/09/2008 -இல் சென்னையில் கவிஞர் சுரதாவுக்கு நினைவு சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
நடத்திய இதழ்கள்:
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினர், இவ்விதழை தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) என பல இதழ்களை வெளியிட்டார்
படைப்புகள்:
தேன்மழை, துறைமுகம்,சிரிப்பின் நிழல்,எச்சில் இரவு,சிக்கனம்,சுவரும் சுண்ணாம்பும்,நெய்தல் நீர், உதட்டில் உதடு, அமுதும் தேனும்,பாரதிதாசன் பரம்பரை,வினாக்களும் சுரதாவின் விடைகளும், எப்போதும் இருப்பவர்கள்,தமிழ்ச் சொல்லாக்கம், சொன்னார்கள், சிறந்த சொற்பொழிவு,சாவின் முத்தம்,கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர், தொடாத வாலிபம், பட்டத்தரசி, பாவேந்தரின் காளமேகம், மங்கையற்கரசி, முன்னும் பின்னும், புகழ்மாலை, வெட்ட வெளிச்சம், வார்த்தை வாசல் போன்ற நூல்களை படைத்துள்ளார்.
சிறப்புகள்:
அரசவை கவிஞராக நாமக்கல் கவிஞர் இருந்தபோதும் அவரின் உதவியாளராக இருந்துள்ளார்.
மறைவு:
இவர் தன்னுடைய 84ஆம் வயதில் 20/06/2006இல் சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்க்கை எய்தினார்,
TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE