தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்
தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 2 |சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்.

 

 

 

 

Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.  அவை உயிர்மெய், ஆய்த எழுத்து, உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம்.இவற்றை பற்றி விரைவாக இங்கு காண்போம்.

 

தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்
தமிழ் இலக்கணம் | Tamil Grammar | Part 4 | சார்பெழுத்துக்கள் | சார்பெழுத்துக்களின் வகைகள் | 10 வகை சார்பெழுத்துக்களின் விளக்கம்

 

உயிர்மெய் :

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய்யெழுத்துக்கள் தோன்றுகின்றது.

எடுத்துக்காட்டு: த் + அ – த

இதில் மெய் எழுத்தின் ஒலி முன்னும் உயிர் எழுத்தின் ஒலி பின்னும் வரும்.

இவை உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சார்ந்து தோன்றுவதால் சார்பெழுத்து ஆகும்.

 

ஆய்தம் :

ஆய்த எழுத்து ஃ ஆகும்.

இது மூன்று புள்ளிகளை உடையது ஆதலால் இது முப்பாற்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.  தானாகவோ அல்லது மெய் எழுத்துக்களுடனோ சேர்ந்து ஒலிக்கும் ஆற்றல் இல்லாததால் ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும்.

 

உயிரளப்படை:

உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்துக்களான ஆ , ஈ, ஊ , ஏ , ஐ , ஓ , ஔ ஆகிய ஏழு எழுத்துக்களும் செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்யும் பொருட்டு தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு மூன்று மாத்திரை அளவில் ஒலிக்கும், அதுவே உயிரளபெடை ஆகும். அளபெடைக்கு அடையாளமாக நெடில் எழுத்தின் அருகில் அதன் குறில் எழுத்து வரும்.

நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை, குறில் எழுத்துக்கு 1 மாத்திரை. ஆகவே மூன்று மாத்திரை அளவில் உயிர் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்.

எடுத்துக்காட்டு:

வாஅள் (வாள்).

 

உயிரௌபெடை மூன்று வகைப்படும் அவை

  1. செய்யுளிசை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை

 

ஒற்றளபெடை:

செய்யுளில் ஓசை குறையும் பொழுது ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய பத்து மெய் எழுதும், ஆய்தமும் அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

அண்ண்ணன் (அண்ணன்)

 

குற்றியலுகரம்:

உ – என்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை யாக குறைந்து ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பந்து – பந் (த் + உ )

 

குற்றியலிகரம்:

இ – என்ற இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலித்தால் அது குற்றியலிகரமாகும்.

எடுத்துக்காட்டு:

நாடு + யாது  – நாடியாது

 

ஐகாரக் குறுக்கம்:

ஐ – எனும் உயிர் எழுத்து ஐகாரம் எனப்படும். இது நெடில் எழுத்து, இது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்காமல் இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தென்னை மரம் – தென்ன மரம்.

இரண்டு மாத்திரை – ஒரு மாத்திரை

 

ஔகாரக் குறுக்கம்:

ஔ- எனும் உயிர் எழுதும் ஔகாரம் ஆகும். இது ஒரு நெடில் எழுத்து. இரண்டு மாத்திரை அளவில் ஒலிப்பது. இந்த ஔகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாக ஒலிப்பது ஔகாரக் குறுக்கம் என்பர்.

எடுத்துக்காட்டு:

அவ்வையார்  – ஔவையார்

1 1/2 மாத்திரை – 2 மாத்திரை

 

மகர குறுக்கம்:

“ம் ” என்னும் மெய் எழுத்து மகரம் ஆகும். இது அரை மாத்திரை அளவில் ஒலிப்பது. இந்த மகரம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தால் அது மகரக் குறுக்கம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

வரும் வண்டி

 

ஆய்தக் குறுக்கம்:

“ஃ” எனும் ஆய்த எழுதும் தனக்குரிய அரை மாத்திரத்தில் இருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒழிப்பதே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

லகர, ளகர மெய்கள் முன்னே தகரம் வரும் போது லகர, ளகர மெய்கள் ஆய்தமாக மாறி ஒலிக்கும். அவ்வாறு ஒலிக்கும் போது தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

லகரத்தின் முன்வரும் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வரும் தகரம் டகரமாகவும் மாறி ஒலிக்கும்.

 

For More TNPSC Notes – CLICK HERE

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply