Mahathma Gandhi Biography | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு | TNPSC Gudie
Mahathma Gandhi Biography | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு | TNPSC Gudie

Mahathma Gandhi Biography | TNPSC தினம் ஒரு அறிஞர் | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு | TNPSC Guide

Mahathma Gandhi Biography | TNPSC தினம் ஒரு அறிஞர் | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு

Mahathma Gandhi Biography | TNPSC தினம் ஒரு அறிஞர் | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு | TNPSC Guide
Mahathma Gandhi Biography | TNPSC தினம் ஒரு அறிஞர் | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு | TNPSC Guide

 

அறிமுகம் :

Mahathma Gandhi Biography |மகாத்மா காந்தி ஆசிரியர் குறிப்பு | மகாத்மா காந்தி அவர்கள் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

 

Mahathma Gandhi Biography:

பிறப்பு :

இவரது இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவர் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் ஊரில் 1869 ஆம் வருடம் அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். 02/10/1869 -ல் இருந்து – 30/01/1948 வரை வாழ்ந்தார்.  இவர் ஒரு வழக்கறிஞர் ஆவர். அந்நிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதி. இவரை இந்தியாவின் தேசிய தந்தை என்று அன்புடன் அழைக்கபடுகிறார்.

பெற்றோர் :

இவரது தாய்மொழி குஜராத்தி.  இவரது பெற்றோர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி – புத்லிபாய் ஆவர்.

 

வாழ்க்கை வரலாறு :

இவரது வாழ்க்கை துணைவி கஸ்தூரிபாய் ஆவர். காந்தி தனது 13 வது வயதில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் நான்கு ஆண்மகன்களை பெற்றெடுத்தனர். அவர்களது பெயர் ஹரிலால் (1988), தேவதாஸ்(1890) மணிலால்(1892), ராம்தாஸ்(1897). மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது 16 வது வயதில் தந்தையை இழந்தார்.

இவர் பள்ளிப்படிப்பில் சுமாரான மனவராகவே காணப்பட்டார். தனது 18வது வயதில் பள்ளிப்படிப்பு  முடிந்த பின் பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தனது படிப்பினை வெற்றிகரமாக முடித்த பிறகு பம்பாயில் கொஞ்சம் காலம் வழக்கறினராக பணியாற்றினார். பின் தனது அண்ணன் இருப்பிடமான ராஜகோட்டிற்கு சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் பணியில் இருந்தார்.அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட தகராறில் அந்த வேலையும் பறிபோனது. பின் தென்னாபிரிக்காவில் தனது தகுதிக்கு ஏற்ற வேலை இருப்பதாக அறிந்த காந்தி 1893 ஏப்ரல் முதல் அப்துல்லாஹ் கம்பெனி உதவியுடன் அங்கு சென்றார்.

 

அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் அதிகமாக காணப்பட்டது. தென்னாபிரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.

தென்னாபிரிக்காவில் உள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு நாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காட சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை அகற்றுமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். அதை காந்தி அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். பின் ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணசீட்டுடன் தொடரூந்தில் முதல் வகுப்பு பெட்டியில் காந்தி பயணம் செய்தார். மகாத்மா காந்தி வெள்ளையர் அல்லாத காரணத்தால் தொடருந்து நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் இருந்து தூக்கி ஏறியபட்டர். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல துன்பங்களை காந்தி அவர்கள் அனுபவித்தார். இதன் மூலம் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் துன்பங்களை நன்கு அறிந்துகொண்டார் காந்தி.

 

தென்னாபிரிக்காவில் தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்திய திரும்பும் வேளையில் அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை நட்டால் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்து அறிந்துகொண்டார். இதை எதிர்க்குமாறு அங்குள்ள இந்தியாய் நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்கள் தங்களிடம் இதற்கு தேவையான சட்ட அறிவு இல்லை என்று காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்களுக்காக இந்திய திரும்பும் முடிவினை மாற்றி கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

பிறகு 1894 ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளராக ஆனார். இதன் மூலம் நாட்டல் மஹனத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை தங்கள் உரிமைக்காக போராட ஊக்கப்படுத்தினார்.

 

1906 இல் ஜோகர்னஸ்பேக் நகரில் நடந்த போராட்டத்தில் சத்தியாகிரகம் எனும் அறவழி போராட்டத்தினை பயன்படுத்தினர்.

1915இல் ஜனவரி 9 அன்று மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு மாறியிருந்தார். காந்தி ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

 

1924இல் தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அறப்போராட்ட வழிமுறைகளையும், சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

 

1930 ஆம் ஆண்டு பிப்ரவரி இல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. இதை எதிர்த்து மார்ச் 2 1930 இல் 78 சத்யாகிரகிகளுடன் காந்தி அஹமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை மேற்கொண்டார் . 23 நாட்கள் நடைப்பயணத்திற்கு பிறகு தண்டி வந்து சேர்ந்த காந்தி அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து ஆங்கிலேயருக்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். அப்போராட்டத்தில் காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அப்போராட்டத்தில் காந்தி வெற்றி பெற்றார். ஆங்கிலேய அரசு உப்புக்கான வரியை நீக்கியது.

1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.  இது போன்ற போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது.

காந்தி அவர்கள் இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாவிரத போராட்டங்கள் மேற்கொண்டார்.

 

சிறப்புகள் :

காந்திக்கு மகாத்மா எனும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 ஐ விடுதலை போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசு காந்திக்கு அவரது தியாகத்தை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

காந்தி அவர்களின் நினைவிடங்கள் சென்னை, கன்னியாகுமாரி,மதுரை என பல இடங்களில் உள்ளன.

படைப்புகள்:

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது.

 

மறைவு:

மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் மலை 5.17 மணிக்கு 144 நாட்கள் தங்கியிருந்த டெல்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி ) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே என்பவனால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மகாத்மா காந்தி அவர்கள் தனது 78 ஆவது வயதில் மரணமடைந்தார்.

 

 

மகாத்மா காந்தி பற்றிய 50 தேர்வு கேள்விகள் மற்றும் பதில்கள் (TNPSC)

1.மகாத்மா காந்தியின் பிறந்த தேதி என்ன?

A) 1865 அக்டோபர் 2

B) 1869 அக்டோபர் 2

C) 1872 அக்டோபர் 2

D) 1875 அக்டோபர் 2

பதில்: B) 1869 அக்டோபர் 2

 

2.மகாத்மா காந்தி எந்த மாநிலத்தில் பிறந்தார்?

A) பஞ்சாப்

B) குஜராத்

C) உத்தரபிரதேசம்

D) மஹாராஷ்டிரா

பதில்: B) குஜராத்

 

3.மகாத்மா காந்தியின் இயற்பெயர் என்ன?

A) சத்யவிருத்தி ராமன்

B) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

C) ராகு ராஜ

D) சுதாகரன்

பதில்: B) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

 

4.மகாத்மா காந்தி எப்போது இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தார்?

A) 1894

B) 1919

C) 1915

D) 1906

பதில்: A) 1894

 

5.மகாத்மா காந்தியின் வாழ்க்கை துணை யார்?

A) தேவதாஸ்

B) கஸ்தூரிபாய்

C) சுதாகரன்

D) கிருஷ்ணா

பதில்: B) கஸ்தூரிபாய்

 

6.மகாத்மா காந்தி தனது 13 வது வயதில் யாருடன் திருமணம் செய்தார்?

A) புத்லிபாய்

B) கஸ்தூரிபாய்

C) தேவதாஸ்

D) ராமா

பதில்: B) கஸ்தூரிபாய்

 

7.மகாத்மா காந்தி எப்போது பம்பாயில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்?

A) 1895

B) 1900

C) 1902

D) 1906

பதில்: A) 1895

 

8.மகாத்மா காந்தி எந்த நாட்டில் சட்டப் படிப்பை முடித்தார்?

A) இந்தியா

B) ஆங்கிலம்

C) அமெரிக்கா

D) ஜப்பான்

பதில்: B) ஆங்கிலம்

 

9.மகாத்மா காந்தி எப்போது தென்னாபிரிக்கா சென்று வேலை செய்தார்?

A) 1893

B) 1905

C) 1898

D) 1900

பதில்: A) 1893

 

10.தென்னாபிரிக்காவில் “சத்தியாகிரகம்” என்ற போராட்ட முறை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) பாபு நாடர்

B) சுபாஷ் சந்திர போஸ்

C) மகாத்மா காந்தி

D) வி. எ. சி. கருணாநிதி

பதில்: C) மகாத்மா காந்தி

 

11.மகாத்மா காந்தி எப்போது மும்பையில் துறைமுகத்தில் இறங்கினார்?

A) 1915

B) 1925

C) 1942

D) 1930

பதில்: A) 1915

 

 

12.மகாத்மா காந்தி 1930ஆம் ஆண்டு எவ்வளவு மைல் நடைப்பயணம் மேற்கொண்டார்?

A) 150 மைல்

B) 300 மைல்

C) 240 மைல்

D) 100 மைல்

பதில்: C) 240 மைல்

 

13.மகாத்மா காந்தி 1920-இல் எதை அறிமுகப்படுத்தினார்கள்?

A) தவிர்க்கும் போராட்டம்

B) சத்தியாகிரஹம்

C) சுதேசி இயக்கம்

D) உரிமை உணர்வு

பதில்: C) சுதேசி இயக்கம்

 

14.மகாத்மா காந்தி எப்போது “வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தை நடத்தினார்கள்?

A) 1942

B) 1945

C) 1930

D) 1940

பதில்: A) 1942

 

15.மகாத்மா காந்தி 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் எந்த முக்கிய நிகழ்வில் பங்கெடுத்தார்?

A) குவைத் போராட்டம்

B) விருதுகள் வழங்குதல்

C) இந்திய விடுதலை

D) இந்திய கிராமிய தொழில்கள்

பதில்: C) இந்திய விடுதலை

 

16.மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு எப்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்?

A) ஜனவரி 30

B) பிப்ரவரி 15

C) அக்டோபர் 2

D) நவம்பர் 1

பதில்: A) ஜனவரி 30

 

17.மகாத்மா காந்தி எந்த துறைமுகத்தில் இறங்கியபோது “கத்தியவாரி” உடையில் இருந்தார்?

A) மும்பை

B) கோல்கட்டா

C) சென்னை

D) புராதி

பதில்: A) மும்பை

 

18. 1924ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
a) ஜவஹர்லால் நேரு
b) சுபாஷ் சந்திர போஸ்
c) மகாத்மா காந்தி
d) சரோஜினி நாயுடு
சரியான விடை: c) மகாத்மா காந்தி

 

19.தண்டி நடைபயணம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
a) 1930 மார்ச் 2
b) 1929 ஏப்ரல் 6
c) 1931 ஆகஸ்ட் 15
d) 1930 ஜனவரி 30
சரியான விடை: a) 1930 மார்ச் 2

 

 

20. தண்டி நடைபயணத்தின் தூரம் எவ்வளவு?
a) 150 மைல்
b) 240 மைல்
c) 200 மைல்
d) 300 மைல்
சரியான விடை: b) 240 மைல்

 

21.தண்டி போராட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்ன?
a) உப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு
b) வரி குறைப்பது
c) சுதேசி பொருள்களை ஆதரித்தல்
d) பெண்களின் உரிமைகள்
சரியான விடை: a) உப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு

 

22.வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்போது நடைபெற்றது?
a) 1942
b) 1947
c) 1930
d) 1935
சரியான விடை: a) 1942

 

23.ஆங்கிலேய அரசு உப்புக்கான வரியை எப்போது நீக்கியது?
a) தண்டி போராட்டத்திற்குப் பிறகு
b) 1947 சுதந்திரத்திற்குப் பிறகு
c) 1942 போராட்டத்திற்குப் பிறகு
d) 1935 சட்ட மசோதாவுக்குப் பிறகு
சரியான விடை: a) தண்டி போராட்டத்திற்குப் பிறகு

 

 

24.மகாத்மா எனும் பெயரை காந்திக்கு யார் வழங்கினார்?
a) ஜவஹர்லால் நேரு
b) பாலகங்காதர திலகர்
c) இரவீந்திரநாத் தாகூர்
d) சரோஜினி நாயுடு
சரியான விடை: c) இரவீந்திரநாத் தாகூர்

 

25.மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன?
a) சத்யாகிரக கதை
b) சத்திய சோதனை
c) உப்புப் போராட்டம்
d) சுதந்திரம்
சரியான விடை: b) சத்திய சோதனை

 

 

26.தியாகிகள் தினமாக எந்த நாளைக் கொண்டாடுகிறோம்?
a) ஆகஸ்ட் 15
b) ஜனவரி 30
c) அக்டோபர் 2
d) ஆகஸ்ட் 9
சரியான விடை: b) ஜனவரி 30

 

27.மகாத்மா காந்தி மரணமடைந்த வயது என்ன?
a) 70
b) 75
c) 78
d) 80
சரியான விடை: c) 78

 

28.மகாத்மா காந்தி உட்பட எத்தனை பேர் தண்டி நடைபயணத்தில் பங்கேற்றனர்?
a) 100
b) 78
c) 240
d) 50
சரியான விடை: b) 78

 

29.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் தலைமை யார்?
a) ஜவஹர்லால் நேரு
b) மகாத்மா காந்தி
c) சுபாஷ் சந்திர போஸ்
d) பாலகங்காதர திலகர்
சரியான விடை: b) மகாத்மா காந்தி

 

30.மகாத்மா காந்தியின் நினைவிடங்கள் தமிழகத்தில் எங்கு உள்ளன?
a) மதுரை
b) சென்னை
c) கன்னியாகுமரி
d) மேலே கூறிய அனைத்தும்
சரியான விடை: d) மேலே கூறிய அனைத்தும்

 

31.மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் எத்தனை முறை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்?
a) 20 முறை
b) 10 முறை
c) 17 முறை
d) 25 முறை
சரியான விடை: c) 17 முறை

 

32.சென்னையில் உள்ள காந்தி மண்டபம் எதற்காக அமைக்கப்பட்டது?
a) அவரது எழுத்துக்களை வெளிப்படுத்த
b) அவரது தியாகத்தை சிறப்பிக்க
c) உப்புப் போராட்டத்தை நினைவுகூர
d) சமாதானத்தை வலியுறுத்த
சரியான விடை: b) அவரது தியாகத்தை சிறப்பிக்க

 

 

 

 

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

For More Updates Join Our Telegram Group – CLICK HERE

For More Updates Join Our Whats App Group – CLICK HERE

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply