TNPSC தினம் ஒரு அறிஞர்
TNPSC தினம் ஒரு அறிஞர்

Kavimani Desiga Vinayagam Pillai Biography | TNPSC Tamil Acadamy | TNPSC தினம் ஒரு அறிஞர்

Kavimani Desiga Vinayagam Pillai Biography | TNPSC Tamil Acadamy | TNPSC தினம் ஒரு அறிஞர்

 

TNPSC தினம் ஒரு அறிஞர் | கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை ஆசிரியர் குறிப்பு | தினம் 8
TNPSC தினம் ஒரு அறிஞர் | கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை ஆசிரியர் குறிப்பு | தினம் 8

 

அறிமுகம் :

Kavimani Desiga Vinayagam Pillai Biography | TNPSC Tamil Acadamy | TNPSC தினம் ஒரு அறிஞர் | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆசிரியர் குறிப்பு | கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்

 

பிறப்பு :

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் 27/07/1876 யில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தார்.

 

பெற்றோர் :

இவரது பெற்றோர் சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமி ஆவர். இரண்டு பெண்களுக்குப்பின் பிறந்த ஆண் மகவு என்பதால் தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுபிள்ளை.

 

வாழ்க்கை வரலாறு :

இவரது மனைவி பெயர் உமையம்மை ஆகும். இவர் 1901 இல் மணமுடித்தார் . நாஞ்சில் நாட்டார் தன மனைவியை குட்டி,பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தனது மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைத்தார். குழந்தைப் பேறு இல்லாததால் தனது சகோதரி (அக்கா) மகன் சிவதாணுவை தனது மகனை போல வளர்த்தார் .

 

இவர் நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றினார் .

 

இவர் தனது மலரும் மாலையும் என்ற நூலில் 25க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள் பாடியுள்ளார் . முதலில் குழந்தைகளுக்காக பாடல்களை தொடர்ச்சியாக பாடினார் . “தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு” எனும் குழந்தை பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார் . காந்தளூர்சாலை பற்றிய ஆய்வு நுழை தமிழில் எழுதியுள்ளார். கம்பராமாயணம், திவாகரம், நவநீத பாட்டியல் போன்ற பல நூல்களில் ஏட்டு பிரதிகளை தொகுத்திருக்கிறார்.

இவர் ஆராய்ச்சி துறையிலும் பல அறிய பணியகளை ஆற்றியுள்ளார்.

 

சிறப்பு பெயர் :

தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு 24/12/1940 யில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார் . 1954 இல் கவிமணிக்கு தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. 1943இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். அக்டோபர் 2005இல் இந்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

 

படைப்புகள்:

அழகம்மை ஆசிரிய விருத்தம்,

ஆசிய ஜோதி (1941),

மலரும் மாலையும் (1938),

மருமக்கள்வழி மான்மியம் (1942),

உமார் கய்யாம் பாடல்கள் (1945),

கதர் பிறந்த கதை (1947),

தேவியின் கீர்த்தனங்கள்,

குழந்தைச்செல்வம்,

கவிமணியின் உரைமணிகள்,

காந்தளூர் சாலை,

தோட்டத்தின் மீது வெள்ளை பசு

போன்ற நூல்களை படைத்துள்ளார்.

 

சிறப்புகள்:

இவர் பல வேற்று மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எட்வின் ஆர்னால்டின் Light of Asia என்ற நூலை  தமிழில் தழுவி ஆசிய ஜோதியை எழுதினார் . பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.

 

மறைவு:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவரகள் 26/09/1954 இல் தனது 78 ஆவது வயதில் மறைந்தார்.

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவரகள் பற்றிய 20 தேர்வு கேள்விகள் மற்றும் பதில்கள் (TNPSC)

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எப்போது பிறந்தார்?
    A) 27/07/1875
    B) 27/07/1876
    C) 27/07/1877
    D) 27/07/1878
    பதில்: B) 27/07/1876

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பிறப்பிடம் எது?
    A) மதுரை
    B) கன்னியாகுமரி
    C) சென்னை
    D) திருச்சிராப்பள்ளி
    பதில்: B) கன்னியாகுமரி

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பெற்றோர் யார்?
    A) சிவதாணு மற்றும் ஆதிலட்சுமி
    B) சிவதாணு மற்றும் வணங்கும் தேசிக
    C) ஆதிலட்சுமி மற்றும் சிவராஜா
    D) சிவதாணு மற்றும் திவ்யா
    பதில்: A) சிவதாணு மற்றும் ஆதிலட்சுமி

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மனைவி பெயர் என்ன?
    A) உமையம்மை
    B) சிதம்பரர்
    C) மயூரி
    D) ராதிகா
    பதில்: A) உமையம்மை

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?
    A) 25 ஆண்டுகள்
    B) 30 ஆண்டுகள்
    C) 36 ஆண்டுகள்
    D) 40 ஆண்டுகள்
    பதில்: C) 36 ஆண்டுகள்

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “மலரும் மாலையும்” என்ற நூலில் எத்தனை குழந்தை பாடல்கள் எழுதியுள்ளார்?
    A) 10
    B) 15
    C) 20
    D) 25
    பதில்: D) 25

 

 

  1. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு” என்ற பாடல் எந்த நூலிலிருந்து வந்தது?
    A) ஆசிய ஜோதி
    B) மலரும் மாலையும்
    C) தேவியின் கீர்த்தனங்கள்
    D) காந்தளூர் சாலை
    பதில்: B) மலரும் மாலையும்

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சென்னையின் தமிழ் பேரகராதி உருவாக்கத்தில் எந்தப் பொறுப்பில் இருந்தார்?
    A) ஆசிரியர்
    B) மதிப்பியல் உதவியாளர்
    C) தலைமை பணியாளர்
    D) பயிற்சியாளர்
    பதில்: B) மதிப்பியல் உதவியாளர்

 

 

  1. ஆசிய ஜோதி” என்ற நூலை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எங்கு மொழிபெயர்த்தார்?
    A) பசிகி
    B) ஜப்பானிய
    C) ஆங்கிலம்
    D) பாரசீக
    பதில்: C) ஆங்கிலம்

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “காந்தளூர் சாலை” என்ற நூலை எப்போது எழுதியுள்ளார்?
    A) 1938
    B) 1940
    C) 1942
    D) 1945
    பதில்: C) 1942

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “பொன்னாடை” போர்த்தி கௌரவிக்கப்பட்டவர்?
    A) ராஜாஜி
    B) அண்ணாமலை அரசர்
    C) காந்தி
    D) பெரியார்
    பதில்: B) அண்ணாமலை அரசர்

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு “கவிமணி” என்ற பட்டம் எப்போது வழங்கப்பட்டது?
    A) 1935
    B) 1940
    C) 1945
    D) 1950
    பதில்: B) 1940

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954 இல் எங்கு மறைந்தார்?
    A) சென்னையில்
    B) திருச்சியில்
    C) நாகர்கோவிலில்
    D) தேரூரில்
    பதில்: D) தேரூரில்

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “உமார் கய்யாம் பாடல்கள்” என்ற நூலை எப்போது எழுதியுள்ளார்?
    A) 1940
    B) 1942
    C) 1945
    D) 1950
    பதில்: C) 1945

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “குழந்தைச்செல்வம்” என்ற நூலை எப்போது எழுதினார்?
    A) 1938
    B) 1942
    C) 1945
    D) 1947
    பதில்: B) 1942

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “கதர் பிறந்த கதை” என்ற நூலை எப்போது எழுதியுள்ளார்?
    A) 1938
    B) 1940
    C) 1947
    D) 1950
    பதில்: C) 1947

 

 

  1. பாரசீக கவிஞர் உமர் கய்யாம்” பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
    A) பாரதிராஜா
    B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    C) ஆர். பாரதிராஜா
    D) தேவதாசி
    பதில்: B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 

  1. ஆசிய ஜோதி” என்ற நூலை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எந்த மொழியில் எழுதியுள்ளார்?
    A) ஆங்கிலம்
    B) தமிழ்
    C) பரசிகி
    D) ஜப்பானிய
    பதில்: B) தமிழ்

 

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “அழகம்மை ஆசிரிய விருத்தம்” என்ற நூலை எப்போது எழுதியுள்ளார்?
    A) 1935
    B) 1940
    C) 1941
    D) 1942
    பதில்: C) 1941

 

  1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954 இல் எவ்வளவு வயதில் மறைந்தார்?
    A) 75
    B) 78
    C) 80
    D) 85
    பதில்: B) 78

 

 

 

TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply