Current Affairs December 2nd Week 2024 | TNPSC Tamil Academy
Current Affairs December 2nd Week 2024 | TNPSC Tamil Academy | இப்பதிவில் 2024 வது வருடம் டிசம்பர் 1st Week அன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகளை விரிவாக காணலாம். இந்த உரையின் இறுதியில் மாதிரி வினா தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளவும்.

- டிசம்பர் 2nd Week 2024 முக்கிய நிகழ்வுகள்:
- 1.இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதி சேவை அமைப்பின் 50வது நிறுவன தினம் :
- 2.பிணையில்லா விவசாயக்கடன் உச்சவரம்பு உயர்வு:
- 3.தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்:
- 4.தலைமைச்செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாடு:
- 5.ஜல்வாஹக் திட்டம் அறிமுகம்:
- 6. சையதுமோடி இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டி 2024:
- 7. 55-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழா 2024:
- 8. விஞ்ஞானிகா 2024:
- 9. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்:
- TNPSC Model Questions and Answers :
டிசம்பர் 2nd Week 2024 முக்கிய நிகழ்வுகள்:
1.இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதி சேவை அமைப்பின் 50வது நிறுவன தினம் :
டிசம்பர் 14, 2024 அன்று இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிசேவை அமைப்பு (IP & TAFS ) தனது 50 வது நிறுவனத்தினத்தை புதுதில்லியில் கொண்டாடியது. இந்த நிகழ்வில் குடியரசு துணை தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம் . சிந்தியா கலந்து கொண்டனர்.
2.பிணையில்லா விவசாயக்கடன் உச்சவரம்பு உயர்வு:
இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிணையில்லா கடன்களின் உச்சவரம்பை ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ர். 2 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 1, 2025 முதல் அமல்படுத்தப்படும்.
3.தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்:
டிசம்பர் 14, 2024 அன்று, எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினம் எரிசக்தி சேமிப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
4.தலைமைச்செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாடு:
டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்ற தலைமை செயலாளர்கள் நான்காவது தேசிய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி ” தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, மக்கள்தொகை பங்கீட்டை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
5.ஜல்வாஹக் திட்டம் அறிமுகம்:
டிசம்பர் 15, 2024 அன்று, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சார்பானந்த சோனோவால் “ஜல்வாஹக்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம், தேசிய நீர்வழிகள் வழியாக நீண்ட தூர சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
6. சையதுமோடி இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டி 2024:
இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷயா சென் , டிரீசா ஜாலி/ காயத்ரி கோபிநாத் இணை, சையதுமோடி இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர். சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் வு லு யு வை 21-14, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
7. 55-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழா 2024:
கோவாவில் நடைபெற்ற 55-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், லத்துவேனியன் திரைப்படமான “டாக்சிக் ” சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை பெற்றது.
8. விஞ்ஞானிகா 2024:
டிசம்பர் 1, 2024 அன்று இந்தியா சர்வேதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக விஞ்ஞானிகா” என்ற அறிவியல் இலக்கிய விழா தொடங்கியது. இதில், இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிமைத்தல் போன்ற அமர்வுகள் நடைபெற்றன.
9. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்:
மத்திய கூட்டுறவுத்துறை, 11 மாநிலங்களில் தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம் மற்றும் நபார்டு ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுகிறது.
TNPSC Model Questions and Answers :
- இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிசேவை அமைப்பு (IP & TAFS) எந்த ஆண்டில் தனது 50வது நிறுவன தினத்தை கொண்டாடியது?
a) 2023
b) 2024
c) 2025
d) 2022
பதில்: b) 2024
- இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிசேவை அமைப்பின் 50வது நிறுவன தினம் எந்த நகரில் கொண்டாடப்பட்டது?
a) மும்பை
b) சென்னை
c) புதுதில்லி
d) பெங்களூரு
பதில்: c) புதுதில்லி
- இந்தியா அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிசேவை அமைப்பின் 50வது நிறுவன தினத்திற்குப் பிரதான விருந்தினராக யார் கலந்து கொண்டார்?
a) நரேந்திர மோடி
b) ஜக்தீப் தன்கர்
c) ராஜ்நாத் சிங்
d) நிதின்கட்கரி
பதில்: b) ஜக்தீப் தன்கர்
- பிணையில்லா விவசாயக்கடனின் உச்சவரம்பை இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு உயர்த்தியுள்ளது?
a) ரூ. 1.50 லட்சம்
b) ரூ. 2.00 லட்சம்
c) ரூ. 1.75 லட்சம்
d) ரூ. 2.50 லட்சம்
பதில்: b) ரூ. 2.00 லட்சம்
- புதிய விவசாய கடன் உச்சவரம்பு மாற்றம் எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது?
a) டிசம்பர் 14, 2024
b) ஜனவரி 1, 2025
c) பிப்ரவரி 15, 2025
d) மார்ச் 1, 2025
பதில்: b) ஜனவரி 1, 2025
- தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
a) டிசம்பர் 10
b) டிசம்பர் 14
c) ஜனவரி 5
d) பிப்ரவரி 20
பதில்: b) டிசம்பர் 14
- தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
a) கோவை
b) மும்பை
c) புது தில்லி
d) ஹைதராபாத்
பதில்: c) புது தில்லி
- தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டின் முக்கிய தலைப்பு என்ன?
a) விவசாய வளர்ச்சி
b) தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
c) சுகாதாரம் மற்றும் கல்வி
d) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பதில்: b) தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
- “ஜல்வாஹக்” திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது?
a) விவசாய வளர்ச்சிக்கு
b) நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்க
c) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு
d) புத்தாக்க ஆராய்ச்சிக்காக
பதில்: b) நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்க
- “ஜல்வாஹக்” திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது?
a) மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை
b) மத்திய சுற்றுச்சூழல் துறை
c) மத்திய கல்வித் துறை
d) மத்திய நிதித் துறை
பதில்: a) மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை
- சையதுமோடி இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் யார் வெற்றி பெற்றார்?
a) லக்ஷயா சென்
b) பி.வி. சிந்து
c) டிரீசா ஜாலி
d) வு லு யு
பதில்: b) பி.வி. சிந்து
- சையதுமோடி பேட்மிண்டன் போட்டியில் லக்ஷயா சென் எந்த பிரிவில் வெற்றி பெற்றார்?
a) மகளிர் ஒற்றையர்
b) ஆண்கள் ஒற்றையர்
c) கலப்பு இரட்டையர்
d) மகளிர் இரட்டையர்
பதில்: b) ஆண்கள் ஒற்றையர்
- 55-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற்றது?
a) சென்னை
b) கோவா
c) மும்பை
d) கொச்சி
பதில்: b) கோவா
- 55-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை பெற்ற திரைப்படம் எது?
a) ஜல்வாஹக்
b) டாக்சிக்
c) காந்தாரா
d) RRR
பதில்: b) டாக்சிக்
- “விஞ்ஞானிகா 2024” என்ற அறிவியல் இலக்கிய விழா எப்போது தொடங்கப்பட்டது?
a) டிசம்பர் 1, 2024
b) டிசம்பர் 5, 2024
c) நவம்பர் 28, 2024
d) ஜனவரி 10, 2025
பதில்: a) டிசம்பர் 1, 2024
- விஞ்ஞானிகா 2024 எந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கொண்டாடப்பட்டது?
a) இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
b) தேசிய கல்வி மாநாடு
c) உலக சுற்றுச்சூழல் மாநாடு
d) தொழில்முனைவு மாநாடு
பதில்: a) இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
- உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை எந்த துறை அறிவித்தது?
a) மத்திய விவசாயத்துறை
b) மத்திய கூட்டுறவுத்துறை
c) மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை
d) மத்திய நிதித்துறை
பதில்: b) மத்திய கூட்டுறவுத்துறை
- உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் எத்தனை மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது?
a) 5
b) 8
c) 11
d) 15
பதில்: c) 11
- உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்திற்கு எந்த அமைப்புகள் ஆதரவளிக்கின்றன?
a) நபார்டு மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம்
b) உலக வங்கி
c) ஐ.நா.
d) NITI Aayog
பதில்: a) நபார்டு மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம்
- “டாக்சிக்” எந்த நாட்டின் திரைப்படம்?
a) லத்துவேனியா
b) இந்தியா
c) பிரான்ஸ்
d) ஜெர்மனி
பதில்: a) லத்துவேனியா