சுப்ரமணிய பாரதியார் ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு
அறிமுகம் :
சுப்ரமணிய பாரதியார் ஆசிரியர் குறிப்பு | மகாகவி என போற்றப்படும் பாரதியார் அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு,எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள்,அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.
பிறப்பு:
பாரதியார் 11-12-1882 அன்று எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்ரமணியம்.
பெற்றோர்:
இவரது பெற்றோர் சின்னசாமி-இலக்குமி அம்மையார்.
1897 ஆம் ஆண்டு தம் பதினைந்தாம் வயதில் திருமணம் செய்து கொண்டார் . இவரின் மனைவி பெயர் செல்லம்மாள்.
வாழ்க்கை வரலாறு :
ஞானத்தில் சிறந்த இல்லறத்தாருக்குக் கொடுக்கப்படும் பட்டமே ” பாரதி ” ஆகும். பாரதியாருக்கு 1893-ல் அவரது 11 வது வயதில் எட்டயபுர மன்னரால் “பாரதி” என்ற பட்டத்தை பெற்றார். பாரதியாருக்கு மகாகவி பட்டம் வழங்கியவர் இராமசுவாமி ஐய்யங்கார். பாரதியாரின் ஞான குரு நிவேதிதாதேவி. இவரது அரசியல் குரு திலகர்.
பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி சு . நெல்லையப்பர். பாரதியார் தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, அரபு முதலிய மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார்.
பாரதியார் சிறந்த விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தேசபக்தியை தூண்டும் பாடல்கள் இவரது படைப்புகளில் அடங்கும். பெண் விடுதலைக்காகவும், சாதிமறுப்பு, குழந்தை திருமணம் போன்றவற்றிக்கு எதிராகவும் போராடினார்.
சிறப்பு பெயர் :
சுப்ரமணிய பாரதியார் மகாகவி , பாரதி, பாட்டுக்கொரு புலவன் , புதுக்கவிதையின் தந்தை, விடுதலை கவி, தேசிய கவி, நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கபடுகிறார்.
சென்னையிலிருந்து வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியராக பணியாற்றினார். சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியர் சுப்ரமணிய ஐயர்.
இந்தியா 1907 என்ற வார இதழுக்கும் ஆசிரியராக திகழ்ந்தார்.
விஜயா, சூரியா போன்ற பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்தார்.
சுப்ரமணிய பாரதியார் 1905-ல் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கினர்.
கர்மயோகி, பாலபாரதி போன்ற ஆங்கில இதழ்களில் 1908-ல் ஆசிரியராக பணியாற்றினார்.
பாரதியாரின் நூல்கள்:
ஞானரதம், சந்திரிகையின் கதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, தராசு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றினார்.
தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவியம் பாரதியின் ஞானரதம் எனற உரைநடை நூலாகும்.
பாரதியாரின் மொழிபெயர்ப்பு நூல்கள்:
1912-ல் பாரதியார் பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
வங்க மொழியில் பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். இதனை தமிழில் பாரதியார் மொழி பெயர்த்துள்ளார்.
பதஞ்சலி யோகசூத்திரம் என்ற நுழை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
பாரதியாரின் சிறப்புகள்:
பாரதியாரின் புதுக்கவிதை முன்னோடி வால்ட்விட்மன் ஆவார்.
கவிதையில் சுயசரிதை எழுதிய முதல் கவிஞர் பாரதியார் ஆவார்.
பாரதியார் ஆங்கில கவிஞர் ஷெல்லி அவர்களின் மீது மிகுந்த பற்று கொண்டதால் தன்னை ஷெல்லிதாசன் என்று தானே அழைத்துக்கொண்டு அந்த பெயரில் கவிதைகள் எழுதினார்.
1982-ல் கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1982-ல் பாரதியார் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
தமிழில் முதன் முதலில் கருது பட்டன்களை வெளியிட்டவர் பாரதியார் ஆவார்.
இந்தியாவிலேயே நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
மறைவு:
பாரதியார் வழக்கமாக உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் லாவண்யா என்ற யானை ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கிய பொது இவரை தாக்கியதில் உடல் நலம் குன்றினார். அதன் பிறகு சில மாதங்களில் பாரதியார் 11-09-1921 அன்று இறைவனடி சேர்ந்தார்.
TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here
TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE