Mahathma Gandhi Biography | TNPSC தினம் ஒரு அறிஞர் | மகாத்மா காந்தி வாழ்க்கை குறிப்பு
அறிமுகம் :
Mahathma Gandhi Biography |மகாத்மா காந்தி ஆசிரியர் குறிப்பு | மகாத்மா காந்தி அவர்கள் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.
Mahathma Gandhi Biography:
பிறப்பு :
இவரது இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவர் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் ஊரில் 1869 ஆம் வருடம் அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். 02/10/1869 -ல் இருந்து – 30/01/1948 வரை வாழ்ந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவர். அந்நிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதி. இவரை இந்தியாவின் தேசிய தந்தை என்று அன்புடன் அழைக்கபடுகிறார்.
பெற்றோர் :
இவரது தாய்மொழி குஜராத்தி. இவரது பெற்றோர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி – புத்லிபாய் ஆவர்.
வாழ்க்கை வரலாறு :
இவரது வாழ்க்கை துணைவி கஸ்தூரிபாய் ஆவர். காந்தி தனது 13 வது வயதில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் நான்கு ஆண்மகன்களை பெற்றெடுத்தனர். அவர்களது பெயர் ஹரிலால் (1988), தேவதாஸ்(1890) மணிலால்(1892), ராம்தாஸ்(1897). மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது 16 வது வயதில் தந்தையை இழந்தார்.
இவர் பள்ளிப்படிப்பில் சுமாரான மனவராகவே காணப்பட்டார். தனது 18வது வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பின் பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தனது படிப்பினை வெற்றிகரமாக முடித்த பிறகு பம்பாயில் கொஞ்சம் காலம் வழக்கறினராக பணியாற்றினார். பின் தனது அண்ணன் இருப்பிடமான ராஜகோட்டிற்கு சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் பணியில் இருந்தார்.அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட தகராறில் அந்த வேலையும் பறிபோனது. பின் தென்னாபிரிக்காவில் தனது தகுதிக்கு ஏற்ற வேலை இருப்பதாக அறிந்த காந்தி 1893 ஏப்ரல் முதல் அப்துல்லாஹ் கம்பெனி உதவியுடன் அங்கு சென்றார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் அதிகமாக காணப்பட்டது. தென்னாபிரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென்னாபிரிக்காவில் உள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு நாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காட சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை அகற்றுமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். அதை காந்தி அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். பின் ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணசீட்டுடன் தொடரூந்தில் முதல் வகுப்பு பெட்டியில் காந்தி பயணம் செய்தார். மகாத்மா காந்தி வெள்ளையர் அல்லாத காரணத்தால் தொடருந்து நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் இருந்து தூக்கி ஏறியபட்டர். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல துன்பங்களை காந்தி அவர்கள் அனுபவித்தார். இதன் மூலம் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் துன்பங்களை நன்கு அறிந்துகொண்டார் காந்தி.
தென்னாபிரிக்காவில் தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்திய திரும்பும் வேளையில் அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை நட்டால் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்து அறிந்துகொண்டார். இதை எதிர்க்குமாறு அங்குள்ள இந்தியாய் நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்கள் தங்களிடம் இதற்கு தேவையான சட்ட அறிவு இல்லை என்று காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்களுக்காக இந்திய திரும்பும் முடிவினை மாற்றி கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிறகு 1894 ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளராக ஆனார். இதன் மூலம் நாட்டல் மஹனத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை தங்கள் உரிமைக்காக போராட ஊக்கப்படுத்தினார்.
1906 இல் ஜோகர்னஸ்பேக் நகரில் நடந்த போராட்டத்தில் சத்தியாகிரகம் எனும் அறவழி போராட்டத்தினை பயன்படுத்தினர்.
1915இல் ஜனவரி 9 அன்று மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு மாறியிருந்தார். காந்தி ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
1924இல் தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அறப்போராட்ட வழிமுறைகளையும், சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
1930 ஆம் ஆண்டு பிப்ரவரி இல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. இதை எதிர்த்து மார்ச் 2 1930 இல் 78 சத்யாகிரகிகளுடன் காந்தி அஹமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை மேற்கொண்டார் . 23 நாட்கள் நடைப்பயணத்திற்கு பிறகு தண்டி வந்து சேர்ந்த காந்தி அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து ஆங்கிலேயருக்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். அப்போராட்டத்தில் காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அப்போராட்டத்தில் காந்தி வெற்றி பெற்றார். ஆங்கிலேய அரசு உப்புக்கான வரியை நீக்கியது.
1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது.
காந்தி அவர்கள் இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாவிரத போராட்டங்கள் மேற்கொண்டார்.
சிறப்புகள் :
காந்திக்கு மகாத்மா எனும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 ஐ விடுதலை போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு காந்திக்கு அவரது தியாகத்தை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
காந்தி அவர்களின் நினைவிடங்கள் சென்னை, கன்னியாகுமாரி,மதுரை என பல இடங்களில் உள்ளன.
படைப்புகள்:
காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது.
மறைவு:
மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் மலை 5.17 மணிக்கு 144 நாட்கள் தங்கியிருந்த டெல்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி ) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே என்பவனால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தி அவர்கள் தனது 78 ஆவது வயதில் மரணமடைந்தார்.
For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE
For More Updates Join Our Telegram Group – CLICK HERE
For More Updates Join Our Whats App Group – CLICK HERE