TNPSC தினம் ஒரு அறிஞர்
TNPSC தினம் ஒரு அறிஞர்

TNPSC தினம் ஒரு அறிஞர் | நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கனார் ஆசிரியர் குறிப்பு | தினம் 5

நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கனார் ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு

 

அறிமுகம் :

நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் ஆசிரியர் குறிப்பு | நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கனார் அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள், அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்

 

பிறப்பு :

நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கனார் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனுர் என்ற ஊரில் 19-10-1888-இல் பிறந்தார்.

 

பெற்றோர் :

இவரது பெற்றோர் பெயர் வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள் ஆவர்.

 

வாழ்க்கை வரலாறு :

இவரது தந்தை மோகனுரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தார். பெற்றோருக்கு இவர் எட்டாவது குழந்தை ஆவார்.  இவர் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் கல்வி கற்றார். இவர் ஆரம்ப காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். தேச பக்தி மிக்க இவர் காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் வட்டார தலைவராக இருந்தார். 1930-இல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்று ஓராண்டு சிறை சென்றார். சாகித்ய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார்.

 

இவர் கவிதை போட்டிகள் பலவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர். கவிஞர் இராமலிங்கனார் தமிழக மக்களால் காந்திய கவிஞர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.

ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகம் இயக்கத்தில் கவிஞர் இராமலிங்கனார் பங்கேற்று உள்ளார்.

 

சிறப்பு பெயர் :

இவருக்கு நடுவணரசு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது

 

படைப்புகள்:

அவளும் அவனும், அரவணை சுந்தரம் (நாடகம்), இசைத்தமிழ், என் கதை(சுயசரிதம்), கம்பன் கவிதை இன்பக்குவியல், கம்பனும் வால்மீகியும், கலையின்பம் , கவிஞன் குரல்,கவிதாஞ்சலி,கற்பகவல்லி (புதினம்), காதல் திருமணம் (புதினம்), காணாமல் போன கல்யாணப்பெண் (புதினம்), காந்தி அஞ்சலி , கீர்த்தனைகள், சங்கிலிக்குறவன்,காந்திய அரசியல், சங்கொலி,தமிழன் இதயம்,தமிழ்மொழியும் தமிழரசும், தாயார் கொடுத்த தானம், தமிழ்த்தேன் , திருக்குறளும் பரிமேலழகரும் , திருவள்ளுவர் திடுக்கிடுவார் , தேசபக்தர் மூவர், திருக்குறள் கருத்துரை, திருக்குறள் புது உரை , தேமதுரத்தமிழோசை, மரகதவல்லி (புதினம்), மலர்ந்த பூக்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், மலைக்கள்ளன் (புதினம்), மாமன்மகள் (நாடகம்), வள்ளுவரின் உள்ளம் போன்றவை ஆகும் .

 

சிறப்புகள்:

அவர் வாழ்ந்த இல்லம் அவரது நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமை செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இவரது மலைக்கள்ளன் நாவல் எம்.ஜி .ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்துள்ளது .

 

இவர் முத்தமிழிலும் ஓவியக்கலையிலும் வல்லவர் .

 

இக்கவிஞரின் நாட்டுப் பற்றை போற்றும் பொருட்டு இவர் வாழ்ந்த நமக்கலிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. இதில் ஒரு நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் அரசு நியமித்து சிறப்பித்தது.

மறைவு:

இவர் 24/08/1972 அன்று இயற்கை எய்தினார்

 

TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply