TNPSC தினம் ஒரு அறிஞர்
TNPSC தினம் ஒரு அறிஞர்

TNPSC தினம் ஒரு அறிஞர் | பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு | முழு வாழ்க்கை வரலாறு

 

அறிமுகம் :

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு | பாவேந்தர் என போற்றப்படும் பாரதிதாசன் அவர்களில் பிறப்பிடம், பெற்றோர், கல்வி, வாழ்க்கை வரலாறு,எழுதிய நூல்கள், கட்டுரைகள், விருதுகள்,அவரது மறைவு பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

 

TNPSC தினம் ஒரு அறிஞர் | பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு | தினம் 1
TNPSC தினம் ஒரு அறிஞர் | பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு | தினம் 1

 

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு:

பிறப்பு :

பாரதிதாசன் அவர்கள் (புதுச்சேரி ) பாண்டிச்சேரியில் 1981 ஏப்ரல்  29  (29/04/1981) அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும்

 

பெற்றோர் :

கனக சபை முதலியார்  – இலக்குமி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார்

 

வாழ்க்கை வரலாறு :

இவர் பாரதியார் அவர்களின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். பழனி அம்மையார் என்பவரை 1920 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழி பயின்றார் . இருப்பினும் தமிழ் மீது அதீத பற்று உடையவராக இருந்தார். இவர் புதுவை அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

தந்தை பெரியார்அவர்களின் தீவிர தொண்டனாக விளங்கினார். மேலும் அவர் திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு,மத எதிர்ப்பு போன்ற கருத்துக்களுக்கு ஆதரவாக பாடல்கள் எழுதினார். இவர் புரட்சிகரமான பாடல்களை பாடினார்.

புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதிதாசன் ஆவார்.

தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என அழைக்கப்பட்டார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் 1982 இல் அமைக்கப்பட்டது.

 

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு:

சிறப்பு பெயர் :

புரட்சி கவி, பாவேந்தர்,புரட்சி கவிஞர் என சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்.

 

நடத்திய இதழ்கள்:

குயில், பொன்னி.

 

இயற்றிய நூல்கள் :

குடும்ப விளக்கு, இருண்ட வீடு , அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக்காப்பியம்,மணிமேகலை வெண்பா, சேரத்தாண்டவம்,தமிழச்சியின் கத்தி,குறிஞ்சித்திரட்டு,இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, தமிழியக்கம்,பிசிராந்தையார்.

 

விருதுகள் :

இவர் எழுதிய பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது 1969-ல் வழங்கப்பட்டது.

 

பாரதிதாசனின் முதல் கவிதை :

“எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா”

இவரின் முதல் கவிதையை பாரதியாரிடம் கொடுக்கிறார். பாரதியார் இக்கவிதையை “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது ” என குறிப்பிட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்

 

சிறப்புகள்:

தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் பாரதிதாசன் ஆவார்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும் – இது தந்தை பெரியாரை பற்றி பாரதிதாசன் கூற்று

 

பாரதிதாசனை பற்றி கவிஞர்கள் கூற்று :

திரு.வி.க – எனக்கு குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும் , அருவியின் முழுவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்

புதுமைப்பித்தன் – அறிவு கோயிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்

ரா.பி.சேதுப்பிள்ளை – பாரதிதாசனின் கவிதைகளில் வேகம் உண்டு, விடுதலை தாகம் உண்டு, பண்பும் உண்டு, பயனும் உண்டு

கு.ப.ராஜகோபாலன் – பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி பாரதிதாசன்

அ .சிதரம்பரை செட்டியார் – அவர்தம் பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்

 

திருக்குறளை பற்றிய பாரதிதாசனின் கூற்று:

வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே – பாரதிதாசன்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே

தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்- பாரதிதாசன்

அல்லு தொறுஞ்சுவை உள்ளந் தொறும்- பாரதிதாசன்

 

மறைவு:

இவர் ஏப்ரல் 21 ஆம் நாள் 1964 இல் இறைவனடி சேர்ந்தார் (21/04/1964).

 

TNPSC 6th Standard Tamil Book Links Part 1 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 2 : Click Here

TNPSC 6th Standard Tamil Book Links Part 3 : Click Here

For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply