தமிழ் இலக்கணம் | Part 3 | Tamil Grammar Full Explanation | TNPSC Tamil Grammar Guide | TNPSC Exam Tamil Grammar Notes
தமிழ் இலக்கணம் | பகுதி 1 | Tamil Grammar Full Explanation | TNPSC Tamil Grammar Guide | TNPSC Exam Tamil Grammar Notes. தமிழ் மொழியை முத்தமிழ் என்று அழைக்கின்றோம். தமிழ் மொழி இயற்றமிழ், இசைத்தமிழ்,நாடகத்தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. ஆதலால் இதனை முத்தமிழ் என்கிறோம். தமிழின் முப்பிரிவிக்கும் தனித்தனியாக நம் முன்னோர்கள் இலக்கணம் அமைத்துள்ளனர். அகத்தியம் எனும் நூல் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்கிறார்கள்.
இவற்றை பற்றி விரிவாக காண்போம்.
தமிழ் இலக்கண வகைகள்:
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை
- எழுத்து,
- சொல்,
- பொருள்,
- யாப்பு,
- அணி
எழுத்திலக்கணம் :
எழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகைப்படும்
முதலெழுத்து:
முதலெழுத்து உயிரெழுத்து, மெய்யெழுத்து என இரண்டு வகைப்படும்.
“அ ” முதல் “ஒள” வரை உள்ள 12 எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் ஆகும்.
“க் ” முதல் “ன்” வரை உள்ள எழுத்துகள் மெய்யெழுத்துக்கள் ஆகும்.
உயிரெழுத்துக்கள்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
மெய்யெழுத்துக்கள்: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிரெழுத்து குறில் நெடில் என இரண்டு வகைப்படும், மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப்படும்.
உயிரெழுத்து வகைகள்:
குறில் எழுத்துக்கள்: அ, இ, உ, எ, ஒ
நெடில் எழுத்துக்கள்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள.
மெய்யெழுத்து வகைகள்:
வல்லின எழுத்துக்கள்: க், ச், ட், த், ப், ற்.
மெல்லின எழுத்துக்கள்: ங், ஞ், ண், ந், ம்,ன்.
இடையின எழுத்துக்கள்: ய், ர், ல், வ், ழ், ள்.
சார்பெழுத்து:
சார்பெழுத்து மூன்று என்பது மரபு என்று தொல்காப்பியர் கூறுகிறார். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்.
பிற்காலத்தில் நன்னுலார் அதை விரிவு படுத்தி பத்து வகைகளாக வகைப்படுத்தினார்.
- உயிர்மெய் எழுத்து,
- ஆய்த எழுத்து,
- உயிரளபெடை,
- ஒற்றளபெடை,
- குற்றியலுகரம்,
- குற்றியலிகரம்,
- ஐகாரக் குறுக்கம்,
- ஒளகாரக் குறுக்கம்,
- மகரக் குறுக்கம்,
- ஆய்தக்குறுக்கம்.
சார்பெழுத்துக்கள் முதலெழுத்துக்களைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துக்கள் என்று அழைக்கிறோம்.
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன இவை தமிழ் எழுத்துக்கள் எனப்படும். அவை உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆகியவை சேர்ந்து 247 எழுத்துக்கள் உள்ளன.
For More TNPSC Guides – CLICK HERE
Our Whats App Chennal Link : CLICK HERE
“This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal”